Published:Updated:

எழுவரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்!'- ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ! #NowAtVikatan

கேரள முதல்வராக பதவியேற்றார் பினராயி விஜயன்!
கேரள முதல்வராக பதவியேற்றார் பினராயி விஜயன்! ( ANI )

20-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

20 May 2021 4 PM

கேரள முதல்வராக பதவியேற்றார் பினராயி விஜயன்!

கேரள முதலமைச்சராக 2-வது முறையாக பதவியேற்றார் பினராயி விஜயன். வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதியே முடிந்த போதும், இன்று தான் பதவியேற்பு விழா நடைபெற்றது. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலான விருந்தினர்களே விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கேரள அரசு பதவியேற்பு விழாவில், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.


எழுவரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்!'-  ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ! #NowAtVikatan
ANI

கேரள முதலமைச்சராக 2 வது முறையாக பதவியேற்ற பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவி பிரமானம் செய்துவைத்தார். அவரை தொடர்ந்து, 20 புதுமுக அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

20 May 2021 3 PM

தமிழகத்திக்கு கூடுதல் ஆக்ஸிஜன்!

ஆக்ஸிஜன்
ஆக்ஸிஜன்

தமிழகத்தில் தினசரி கொரோனோ நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கான தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மருத்துவ ஆக்ஸிஜனின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக கடந்த சில நாட்களாக தகவல் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்துக்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் இருந்து கூடுதல் ஆக்ஸிஜனை தமிழகத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 May 2021 12 PM

கறுப்பு பூஞ்சைநோய்: `மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை!’ 

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர், ``கறுப்பு பூஞ்சைநோய் குறித்து மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. எனினும் கறுப்பு பூஞ்சைநோய் அறிவிக்கப்பட வேண்டிய நோய். இது புதிதாக உருவான நோய் கிடையாது. உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்கெனவே இருந்துவந்தது. தமிழகத்தில் இதுவரை ஒன்பது பேருக்கு கறுப்பு பூஞ்சைநோய் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் ஒன்பது பேரும் நலமுடன் இருக்கிறார்கள். எனினும், நோய் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இதைக் கண்டறிந்தால் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

20 May 2021 11 AM

கொரோனா பரிசோதனை! - கட்டணம் குறைப்பு

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900-ஆகக் குறைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

20 May 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 2,76,070 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,57,72,400 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா
கொரோனா
மாதிரி படம்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,874. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,87,122-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,23,55,440-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 31,29,878 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,69,077 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 18,70,09,792 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

20 May 2021 8 AM

ஐந்து மாவட்டங்களில் ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசு கடுமையாக அமல்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ஆக்ஸிஜன் படுக்கைகளும், ஆக்ஸிஜன் தேவைகளும் அதிகரித்துள்ளன. இந்தநிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் தடுப்பூசி தயாரிப்பை மாநிலத்திலேயே செய்துகொள்ள பல்வேறு ஏற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் செய்துவருகிறார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்தநிலையில், தற்போது மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்யவிருக்கிறார் முதல்வர். முதற்கட்டமாக அவர் இன்று (20-ம் தேதி) காலை சேலம் மாவட்டத்துக்கு செல்கிறார். சேலம் இரும்பு ஆலை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் கூடிய புதிய சிகிச்சை மையத்தைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து திருப்பூர் செல்லும் முதல்வர், அங்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து கோவையில் முதல்வர் ஆய்வு செய்யவிருக்கிறார். இந்த மாவட்டங்களில் முதல்வர் அதிகாரிகளுடனும், மாவட்ட ஆட்சியருடன் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனையும் நடத்துகிறார், கோவையிலிருந்து இரவு மதுரை செல்லும் ஸ்டாலின் நாளை அங்கு ஆய்வுப் பணிகளை ஆய்வு செய்துவிட்டு, திருச்சியிலும் ஆய்வு செய்யவிருக்கிறார், தொடர்ந்து ஆய்வு குறித்து செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார்.

அடுத்த கட்டுரைக்கு