Published:Updated:

தமிழகத்தில் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 2,396 பேருக்கு தொற்று #NowAtVikatan

கொரோனா
கொரோனா

20.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

20 Jun 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,845 -ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,254 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 704-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,045 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,316 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 32,186 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

20 Jun 2020 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 14,516 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,95,048 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 375 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,948 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனா
கொரோனா

அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,13,831 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் 1,68,269 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு