Corona Live Updates: `ஒரே நாளில் 4,985 பேருக்கு பாசிட்டிவ்’ - தமிழகத்தில் 1.75 லட்சத்தைக் கடந்த பாதிப்பு

20.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
தமிழகத்தில் புதிதாக 4,985 பேருக்குத் தொற்று!
தமிழகத்தில் இன்று மட்டும் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,861 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,776 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 2551 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50,800 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் மேலும் 1,298 பேருக்குத் தொற்று!
சென்னையில் மட்டும் இன்று 1,298 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,235 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா நோய் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,456 ஆக உள்ளது.
இந்தியாவில் 11 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,18,043 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 40,425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 673 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,497 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,00,087 ஆகவும் உயர்ந்துள்ளது.
கொரோனா - உலக நிலவரம்
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,46,40,349 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 87,34,789 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,08,856 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் ஒரேநாளில் 63,584 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை, 38,96,855 ஆக உயர்ந்திருக்கிறது. அதேநேரம், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 1,43,269 ஆக அதிகரித்திருக்கிறது.