Published:Updated:

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை: அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்! #NowAtVikatan

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

20-11-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

20 Nov 2020 10 PM

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை

ஆன்லைன் ரம்மியால் தொடர்ச்சியாக தமிழகத்தில் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இதனையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை: அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்! #NowAtVikatan

தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை என்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை என்று அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

20 Nov 2020 7 PM

கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது!

பன்னீர்செல்வம் - பழனிசாமி
பன்னீர்செல்வம் - பழனிசாமி

2021 சட்டமன்ற தேர்தலுக்கான அ.இ.அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில், வரும் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்தும், கட்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

20 Nov 2020 5 PM

உதயநிதி ஸ்டாலின் கைது!

உதயநிதி
உதயநிதி

தமிழகத்தில் ஒருபக்கம், பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரையை நடத்திவர, மறுபக்கம், உதயநிதி ஸ்டாலின் இன்று, முன்னாள் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி பிறந்த திருக்குவளையிலிருந்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடியே இன்று மாலை பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில், அனுமதியில்லாமல் பிரசாரம் மேற்கொண்டதாக உதயநிதி உள்ளிட்ட தி.மு.க-வினர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டாலும், தொடர்ந்து பிரசாரத்தை மேற்கொள்ளும் முடிவில் உதயநிதி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது உதயநிதி ஸ்டாலின் உட்பட கைதுசெய்யப்பட்ட தி.மு.க-வினர் மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

20 Nov 2020 3 PM

மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது!

`7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களை உடனே கட்டணம் செலுத்தக் கட்டாயப்படுத்தக் கூடாது’ என தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

மருத்துவப் படிப்பு
மருத்துவப் படிப்பு

இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரி டீன்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், விதிமுறைப்படி சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்றும், முதல்வர் அறிவித்த உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும் மருத்துவக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 7.5% இட ஒதுக்கீடு மசோதா: சொலிசிட்டர் ஜெனரலின் பதில் கடிதம்... ஒப்புதல் அளித்த ஆளுநர்! #NowAtVikatan
20 Nov 2020 11 AM

பரப்புரையை ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறார் ஸ்டாலின்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. கட்சிகள் கூட்டணி குறித்துப் பேசத் தொடங்கியிருக்கின்றன. இந்தநிலையில் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 100 நாள்கள் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். வரும் 29-ம் தேதி கனிமொழியும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கும் நிலையில், தற்போது தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பிரசாரத் திட்டம் குறித்துத் தகவல் வெளியாகியிருக்கிறது. வரும் ஜனவரி மாதம், 5-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிரசாரத்தைத் தொடங்கும் ஸ்டாலின், பொங்கலுக்குப் பின்னர் தொடர்ந்து தனது பயணத்தைத் தொடரத் திட்டமிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு