Election bannerElection banner
Published:Updated:

`தி.மு.க தலைவர் ஸ்டாலின் டிசம்பர் 23-ல் இருந்து நேரடி பரப்புரை!’ - பொதுச்செயலாளர் துரைமுருகன் #NowAtVikatan

ஸ்டாலின்
ஸ்டாலின்

20-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

20 Dec 2020 11 AM

டிசம்பர் 23-ம் தேதி முதல் நேரடி பிரசாரம்!

துரைமுருகன்
துரைமுருகன்

`தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார்’ என அக்கட்சி அறிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்களின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், ``இந்தக் கூட்டத்தின் இறுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்கவிருக்கிறார். அதை ஏற்று, களத்தைச் சந்திக்கத் தயாராகுங்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரும் 23-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை நேரடித் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்” என்று அறிவித்தார்.

20 Dec 2020 9 AM

மா.செ கூட்டத்தில் ஸ்டாலின்!

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சிகள் தீவிரமாகத் தயாராகிவருகின்றன. தற்போதே தீவிர பிரசாரங்களைத் தொடங்கிவிட்டன கட்சிகள். இந்தநிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அக்கட்சி அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க-வினர் வரத் தொடங்கினர்.

தி.மு.க தலைமை அலுவலகம்-அண்ணா அறிவாலயம்
தி.மு.க தலைமை அலுவலகம்-அண்ணா அறிவாலயம்

காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், தற்போது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை நடத்திவருகிறார். கூட்டம் முடிந்ததும், அந்த முக்கிய அறிவிப்பு குறித்து தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு