நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரமும் மந்தநிலையில்தான் இருக்கிறது. நம் பணப் பற்றாக்குறையைப் போக்க ஒரே வழி, கூடுதல் வருமானம் சம்பாதிப்பது. அதற்கான முக்கியமான 20 வழிகள் இங்கே உங்களுக்காக...

1. ஃபேஸ்புக் அட்மின்

முக்கியமானவர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் வேலை இது. குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த வேலைக்கான சம்பளம். இதிலிருக்கும் சிறப்பம்சம், இதைப் பகுதி நேரமாகச் செய்ய முடியும் என்பது.

2. யூடியூப் சேனல்

யூடியூப் சேனல்களை உருவாக்கி அதில் பயனுள்ள, வேடிக்கையான வீடியோக்களைப் பதிவு செய்வதன் மூலம் கணிசமாகச் சம்பாதிக்க முடியும். இன்றைக்கு உலக அளவில் பலரும் கணிசமான பணத்தை யூடியூப் மூலம் சம்பாதிக்கிறார்கள்.

3. ரெஸ்யூம் கிரியேஷன்

இன்று வேலைக்கான ‘ரெஸ்யூம்’ தயாரித்துக் கொடுப்பதும் ஒரு தொழிலாக உருவெடுத்திருக்கிறது. ஓய்வு நேரங்களில் வீட்டில் இருந்தபடியே ‘ரெஸ்யூம்’களை உருவாக்கலாம். இதற்கான சந்தை வாய்ப்புகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

4. செல்லப் பிராணிகளுக்கான பெட் ஸ்டே

சென்னை, பெங்களூரு, கோவை மாதிரியான மெட்ரோ நகரங்களில் இந்தத் தொழிலுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. சுமார் நான்கு சென்ட் நிலமிருந்தால் போதுமானது. அந்த இடத்தில் கூரைக் கட்டடங்களை தேவைக்கேற்ப அமைத்துக்கொள்ள வேண்டும்.

5. செல்லப் பிராணிகள் விற்பனை

இன்று நிறைய பேர் நாய், பூனை, பறவைகள், மீன்கள் எனச் செல்லப் பிராணிகள்மீது காதல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவற்றை விற்பனை செய்வதன் மூலம் லாபம் பார்க்க முடியும்.

6. புரோகிராமிங் கோடிங் எழுதுதல்

நீங்கள் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்தவராக இருந்தால் அல்லது தொழில் நுட்ப அறிவு நிரம்பியவராக இருந்தால் இந்த வேலை உங்களுக்கு தாராளமாகப் பொருந்தும். C, C++, Java போன்ற கணினி மொழியில் புரோகிராம் எழுதுவதன் மூலம் ரூ.15,000 வரை சம்பாதிக்க முடியும்.

7. ஃப்ரீலான்ஸ் புகைப்படக்காரர்

இன்று நம்மிடம் 64 பிக்ஸல்கொண்ட கேமரா மொபைல்கள் இருந்தாலும், டி.எஸ்.எல்.ஆர் கேமராக்களில் எடுக்கும் புகைப்படங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். திருமணம் தொடங்கி பல கான்சப்ட்கள் பல்கிப் பெருகியிருக்கும் காலம் இது. Fotolia, Dreamstime and Shutterstock போன்ற இணையதளங்கள் தங்கள் புகைப்படங்கள் மூலம் புகைப்படக் கலைஞர்கள் வருமானம் ஈட்ட உதவுகின்றன.

8. பிளாக் (Blog)

சொந்தமாக ஒரு பிளாக்கைத் தொடங்கி அதில் எழுதுவதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். இதை ஆரம்பிப்பதற்கு ஏதாவது ஒரு துறையில் நீங்கள் திறமையானவராக இருக்க வேண்டும்.

9. வெப்சைட் மற்றும் லோகோ வடிவமைப்பு

நீங்கள் இணையதளத்தை வடிவமைப்பதில் வல்லவராக இருந்தால், அதன் மூலம் பகுதி நேரமாகக் கூடுதல் பணத்தைச் சம்பாதிக்க முடியும். கணினியில் கிராபிக்ஸ் வடிவமைப்பு, போட்டோ எடிட்டிங் தெரியுமென்றால் லோகோ தயாரித்துத் தரலாம்.

10. இ-டியூஷன்

இ-டியூஷன்... இணையத்தில் நிபுணர்களால் எடுக்கப்படும் பயிற்சி வகுப்புகள். இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாகவும், நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் இருக்கிறது. மற்றவர்களுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினால் அதுவே உங்களுக்குச் சிறந்த வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும்.

ஸ்மார்ட்போன் சர்வீஸ் கற்றுக் கொண்டால், பகுதி நேரமாக அதைவைத்துப் பல ஆயிரம் ரூபாய்களைச் சம்பாதிக்க முடியும்.

11. விர்ச்சுவல் அசிஸ்டென்ட்

முழு நேரப் பணியாளர்களைப் பணியமர்த்த முடியாத சிறு வர்த்தக நிறுவனங்கள், தங்கள் வேலைகளைச் செய்து முடிக்க விர்ச்சுவல் உதவியாளர்களைச் சார்ந்துள்ளன. நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களை ஆன்லைன் அல்லது தொலைபேசியில் தொடர்புகொள்ளும் வகையில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம்.

12. ஆன்லைன் டெலிவரி

ஆன்லைன் நிறுவனங்கள், பெருநகரங்களில் பகுதி நேர டெலிவரி வேலைக் கான வாய்ப்புகளைப் பலருக்கும் வழங்குகின்றன. இதன் மூலம் ஒருவர் நல்ல வருமானம் ஈட்டமுடியும்.

13. பைக் டாக்ஸி

வாடகை கார்களை ஓட்டும் டிரைவர்கள் போல, பைக் டாக்ஸி மூலம் ஒரு நாளைக்கு பகுதி நேரமாக 400-800 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இந்தச் சேவையை அளிக்கும் நிறுவனங்களில் ஒருவர் பதிவு செய்துகொள்வதன் மூலம் பைக் டிரைவராகப் பணியாற்ற முடியும்.

14. மொழி வகுப்புகள்

மொழிகளைக் கற்றுத் தருபவர்களுக்கு இப்போது நிறைய மவுசு இருக்கிறது. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் பிரெஞ்ச், ரஷ்ய, இந்தி ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

15. வாகன ஸ்பா

கார்/பைக் கழுவுவதற்குப் படிப்பறிவு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எனவே, இந்த வேலையைப் படித்தவர்கள், படிக்காதவர்கள் யார் வேண்டுமானாலும் பகுதி நேரமாகச் செய்ய முடியும்.

16. டெய்லரிங்

ஒரு பிளவுஸ் தைக்க 50 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த காலம் மாறி, இன்று 500 முதல் 1,500 ரூபாய் வரை தையல் கூலி வாங்கும் அளவுக்கு வருமானம் உள்ளது. டிரெண்டிங்காக டிசைன் செய்பவர்கள் இதில் நிறைய சம்பாதிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

17. வித்தியாச உணவகங்கள்

வித்தியாசமான உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வேலை முடிந்த மாலை நேரங்களைப் பயனுள்ளதாகவும், வருமானத்தை பெருக்கிக் கொளவதாகவும் நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ், குட்டியாக ஒரு கடையை வைப்பதுதான்.

18. சின்ன சின்ன கிச்சன் வேலைகள்

மாவு அரைப்பது, வெங்காயம்/பூண்டு உரிப்பது, தேங்காய் துருவுவது, மக்காச்சோளத்தை உரிப்பது போன்ற கிச்சன் சார்ந்த பல வேலைகளைச் செய்வதற்குப் பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இவர்களுக்காகவே சூப்பர் மார்க்கெட்டுகளில் ரெடிமேடாக அனைத்தையும் பாக்கெட்டுகளில் வைத்திருக்கிறார்கள். இந்த ரெடிமேட் வேலையைப் பகுதி நேரமாகச் செய்து கூடுதல் வருமானம் பார்க்க முடியும்.

19. அயர்னிங் வேலை

மும்பை, பெங்களூரு, சென்னை மாதிரியான பெருநகரங்களில் ஒரு சட்டையை அயர்ன் செய்வதற்கு சுமார் 10 ரூபாய் வாங்குகிறார்கள். இந்தத் தொழிலை பகுதி நேரமாகவும் செய்து வருமானம் பார்க்கலாம்.

20. மொபைல் ரிப்பேரிங்

ஸ்மார்ட்போன் சர்வீஸ் கற்றுக்கொண்டால், பகுதி நேரமாக அதைவைத்துப் பல ஆயிரம் ரூபாய்களைச் சம்பாதிக்க முடியும். இதற்கான பயிற்சியை இரண்டு மாதங்களிலேயே கற்றுக்கொள்ளலாம்.