Published:Updated:

2,000 சொற்களே போதும்!

ENGLIஷ் VINGLIஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ENGLIஷ் VINGLIஷ்

ENGLIஷ் VINGLIஷ்

தீபா ராம்

மிக விரைவாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும்! சொற்களுக்கான பொருள் அறிந்து அவற்றை வாக்கியமாக இணைப்பதன்மூலம்தானே நாம் தாய்மொழியைக் கற்றுக்கொண்டோம்... அதுபோலவே ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வார்த்தைகள்கொண்ட ஆங்கில மொழியில் இருந்து 1,000 அல்லது 1,500 வார்த்தைகளைக்கொண்டே அன்றாடம் உபயோகிக்கும் Communicative English வாக்கியங்களை எளிதாக உருவாக்கலாம். Communicative English என்பது வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரி, விமான நிலையம், வங்கி என நாம் செல்லும் இடங்களில் பொதுவாக உபயோகிக்கும் வாக்கியங்கள் அல்லது வினாக்களே. இவற்றில் இடம், பொருள் அறிந்து சில மாற்றங்களைச் செய்தால் ஆங்கிலமும் நம் வசம்தான்!

2,000 சொற்களே போதும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

Panda Parenting... இந்த முறையை இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியோருக்கும் பயன்படுத்தலாம். அதுவும் வேற்றுமொழி கற்றுக்கொள்ள இந்த முறை மிகச்சிறந்தது. அதென்ன Panda Parenting? யாரையும் சார்ந்து இல்லாமல் குழந்தைகளை Independent ஆக வளர்க்கும் முறைதான் இது. சிறுவயதில் இருந்தே பொறுப்புணர்ச்சியுடனும் தவறு செய்தால் அவற்றிலிருந்து பாடம் கற்று தெளிவான சிந்தனைபெறவும் ஊக்குவிக்கும் குழந்தை வளர்ப்பு முறை. இதுபோல ஆங்கிலம் கற்கவும் முயற்சி செய்யலாம். உ-ம்: To learn a language one can use the methods followed in panda parenting.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிலருக்கு பணிநிறைவு (Retirement) பெற்ற பின்னரும் சுறுசுறுப்பாக ஏதேனும் வேலைசெய்வது பிடிக்கும். அப்படி 60 வயதைத் தாண்டியும் ஒரு நிரந்தர வேலை செய்பவரை Silver Striver என்று சொல்லலாம். உ-ம்: Tommy is a Silver Striver and no wonder everyone knows about his perfection at work.

ENGLIஷ் VINGLIஷ்
ENGLIஷ் VINGLIஷ்

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாவைப் பயன்படுத்தா தவர்கள் குறைவு. இவை இன்று Offence Archaeology எனும் புதியதொரு பரிமாணத்தை உருவாகியுள்ளன. அதென்ன Offence Archaeology? ஒருவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் காணக்கிடைக்கும் பழைய பதிவுகளையெல்லாம் தீவிர ஆராய்ச்சி செய்து அதிலிருந்து அவர் எப்போதோ சொல்லிய ஏற்புடையதல்லாத பின்னூட்டங்கள் (Offensive Comments) எல்லாவற்றையும் கண்டுபிடிக்கும் பழக்கம். ஆக... குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் பழக்கம்தான் Offence archaeology.

உ-ம்: A person should not be judged by his public record, particularly not by offence archaeology.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முகநூல் என்னும் ஃபேஸ்புக்கில் இன்னொரு பழக்கம் Sadfishing. தனக்கு ஏற்பட்ட சோகத்தையோ, அதிருப்தியையோ ஒரு பதிவாக - அதுவும் முழுவதும் சொல்லாமல் மேலோட்டமாக எழுதி ஆறுதல் தேடும் பழக்கம் Sadfishing. உ-ம்: Many people do sadfishing in facebook, so as to gain solace or sympathy.

FIRE என்று ஒரு டெக்னிக்கல் வார்த்தை இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. FIRE என்பது Financial Independence, Retire Early-யின் சுருக்கம். பொருளாதார ரீதியாக நாம் தன்னிறைவு அடைந்துவிட்டால் வேலையிலிருந்து சீக்கிரம் ஓய்வுபெற்றுக் கொள்ளலாமே! அதாவது, தங்களுடைய 20-வது, 30-வது வயதிலேயே தேவையான பொருளை ஈட்டிகொண்டு 40 வயதில் ஓய்வு பெற்றுவிடுவது. உ-ம்: If one could achieve FIRE in his mid thirties then it is a great achievement.

ஒரு புத்தகம் சுவாரஸ்யமாக இருந்தால் அதை கீழே வைக்காமல் ஒரே மூச்சில் ஒரு நாளில் படித்து முடிப்பது வழக்கம். இன்றைய சூழலில் சுவாரஸ்யமான ஒரு தொடரை 24 மணி நேரத்தில் தொடர்ந்து கண்டுகளித்து திருப்தியடைவது Binge Racing. உ-ம்:The NETFLIX series GAME OF THRONES was so popular that many did binge racing to watch the entire seasons.

எல்லாவற்றுக்கும் இன்று Vlog... அதாவது வீடியோ Blog செய்வது நடைமுறையில் உள்ளது. கற்றுக்கொள்பவருக்கும் சுலபமாக இருக்கிறது. வீட்டைப் பராமரிக்கவும், சுத்தம் செய்வதற்கும்கூட (Housework and Cleaning) இன்று இன்ஸ்டாகிராமில் பலர் பதிவுகள் இடுகிறார்கள். இவர்களைப் பொதுவாக Cleanstagrammer என்று செல்லப்பெயர்கொண்டு அழைக்கும் பழக்கம் வந்திருக்கிறது. உ-ம்: Tana is a very popular cleanstagrammer among homemakers all around the World.

வாட்ஸ்அப் குழுக்களில் சேர்ந்து ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடுகள் காரணமாக அதை விட்டு தாமாகவே வெளியேறுவதுதான் Whexit. உ-ம்: Fedup with so many unlikely people Kate chose to Whexit the art group in Whatsapp.

டியூஷன் மாஸ்டரோ, மிஸ்ஸோ கண்டிப்புடன் வீட்டுப்பாடத்தை செய்ய வைப்பார்கள்தானே? இன்று மேலைநாடுகளில் டியூஷன் மாஸ்டர்கள் Homework Therapist என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் குழந்தைகளைப் பொறுமையுடனும் நிதானமாகவும் கையாள்வதாலும், நல்ல முறையில் பரீட்சைக்குத் தயாராக உதவி செய்வதாலும் Homework Therapist என்ற பெயர் உருவாகியது. உ-ம்: The modern name for a tuition master is homework therapist.

தனக்குக் கிடைத்த தகவலை அடுத்தவர் ஆர்வத்துடன் படிக்கும்விதமாக மாற்றி வசீகரமான ஒரு தொகுப்பாகத் தருவதே Data Humanist என்பவரின் வேலை. இன்றைய கூகுள், விக்கிபீடியா உலகில் Data Humanist என்பவரின் வேலையே தகவல்களை சுவாரஸ்யம் மாறாமல் தொகுத்து வழங்குவதுதான். உ-ம்: The job of a data humanist is more like coating the pill with sugar.

இப்படி பல வார்த்தைகள் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு உருவானாலும் அமெரிக்க வானொலி வேறொரு விஷயத்தைச் சொல்கிறது. அமெரிக்க வானொலியான Voice of America, Special English என்னும் மொழியில் தங்களுடைய அலைவரிசையை ஒலிபரப்புகிறது. இந்த ஒலிபரப்பில் அவர்கள் சொல்வது இதுதான்... `2,000 ஆங்கிலச் சொற்கள் மட்டும் தெரிந்தால் போதும்... புரியும்படியான வாக்கியங்களைப் பேசிவிடலாம்!' எடுத்துக்காட்டாக Restaurant என்ற சொல்லுக்குப் பதிலாக Eating Place எனச் சொல்லலாம். ஏனெனில் இந்த 2,000 எளிமையான சொற்பட்டியலில் Restaurant போன்ற சொற்கள் தேவையில்லை என்பது அவர்கள் கருத்து!