Published:Updated:

`சசிகலாவுக்கு ஐசியூ-வில் தொடர்ந்து சிகிச்சை!’ - பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை #NowAtVikatan

வீல் சேரில் சசிகலா
வீல் சேரில் சசிகலா ( ANI )

21-01-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

21 Jan 2021 6 PM

தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலாவுக்கு தொடர் சிகிச்சை!

வீல் சேரில் சசிகலா
வீல் சேரில் சசிகலா
ANI

திடீர் உடல்நிலை குறைபாடு காரணமாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தநிலையில், சசிகலா உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறாது. `சசிகலா உடலில் சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். நுரையீரல் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சசிகலாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது!

21 Jan 2021 6 PM

`தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2-ம் தேதி கூடுகிறது!’

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

`தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2-ம் தேதி கூடுகிறது’ என சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்திருக்கிறார். `ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கும். கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்’ எனவும் தெரிவித்தார்.

21 Jan 2021 3 PM

புனே சீரம் நிறுவனத்தில் தீ விபத்து!

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் அமைந்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

21 Jan 2021 2 PM

பேரறிவாளன் விடுதலை எப்போது?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது; குடியரசுத் தலைவருக்கே அந்த அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்தநிலையில், இன்று நடந்த விசாரணையின்போது இந்த நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றியிருக்கிறது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு பதிலாக ஆளுநரே முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.

பேரறிவாளன்
பேரறிவாளன்

மேலும், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் மூன்று அல்லது நான்கு நாள்களுக்குள் முடிவெடுப்பார் என்றும் மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தநிலையில், அது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அது தொடர்பாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்தவொரு முடிவும் எடுக்காமல் இருக்கிறார். இந்தநிலையில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இவ்வாறு கூறியிருக்கிறது. மத்திய அரசு தரப்பின் வாதத்தை அடுத்து பேரறிவாளன் மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.

பேரறிவாளன் விடுதலையில் மாநில உரிமையைத் தக்கவைக்குமா தமிழக அரசு?
அடுத்த கட்டுரைக்கு