Published:Updated:

`பூரண நலத்தோடு வழக்கமான பரிசோதனைக்கே துரைமுருகன் சென்றிருக்கிறார்!' - கதிர் ஆனந்த் விளக்கம் #NowAtVikatan

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

21.2.2020 | இன்றைய நிகழ்வுகளின் முக்கிய தொகுப்பு..!

21 Feb 2020 8 PM

கதிர் ஆனந்த் விளக்கம்

“சமூகவலைதளங்களில் என் தந்தை துரை முருகன் மிகவும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. அவர் பூரண நலத்தோடு வழக்கமாக நடைபெறக்கூடிய மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் நிறைவு பெற்றவுடன் இன்று இரவு அல்லது நாளை காலை வீடு திரும்புவார் என்று என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.” என வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் விளக்கமளித்துள்ளார்

21 Feb 2020 5 PM

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!

`பூரண நலத்தோடு வழக்கமான பரிசோதனைக்கே துரைமுருகன் சென்றிருக்கிறார்!' - கதிர் ஆனந்த் விளக்கம் #NowAtVikatan

பெண்கள் டி-20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமான தீப்தி ஷர்மா 49 ரன்களை எடுத்தார்.இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்திய தரப்பில் பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

21 Feb 2020 3 PM

கிரேன் ஆபரேட்டர் கைது!

இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்தது. 19.2.2020-ம் தேதி இரவு 9 மணியளவில் நடந்த படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் இறந்தனர். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர். விபத்து தொடர்பாக நடிகர் கமல் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

21 Feb 2020 10 AM

கமல், ஷங்கருக்கு சம்மன்?!

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் போலீஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

21 Feb 2020 7 AM

இந்திய அணி தடுமாற்றம்!

இந்தியா
இந்தியா

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பௌலிங் தேர்வு செய்ய இந்திய அணி முதலில் களமிறங்கியது. மயங்க் அகர்வால், பிரித்திவி ஷா ஓப்பனிங் கொடுத்தனர். முதல் சில ஓவர்களிலேயே பவுண்டரி அடித்து பிரித்திவி ஷா ஓப்பனிங் கொடுத்தாலும், நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

சவுதி அவரை 16 ரன்களிலேயே வெளியேற்ற அடுத்து வந்த புஜாரா, கேப்டன் கோலியும் சிறிதுநேர இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில் கேப்டன் கோலி 2 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இவர்களின் இரண்டு விக்கெட்டுகளையும் கைல் ஜேமிசன் வீழ்த்தி இந்திய அணியை தடுமாற வைத்திருக்கிறார். தற்போது களத்தில் மயங்க் அகர்வால் 34 ரன்களுடனும், ரஹானே 21 ரன்களுடனும் நிற்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு