Published:Updated:

`ஆசிரியர்களும் வீட்டில் இருந்தே பணி செய்யுங்கள்..!’ - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

21.3.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

21 Mar 2020 10 AM

236 ஆக அதிகரித்த பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா தொற்றால் 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 3 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

ஒற்றை பார்ட்டி; ஜனாதிபதி டு எம்.பி வரை கொரோனா அச்சம்?! -பாலிவுட் பிரபலத்தால் கலங்கும் அரசியல்வாதிகள்
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. ?, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை!’ - கொரோனா அப்டேட்ஸ் #NowAtVikatan

இதற்கிடையே, நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள சுய ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பிரதமர் மோடி ஊரடங்கு அறிவித்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

21 Mar 2020 11 AM

நீட் தேர்வு - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு; சிறப்புச் சட்டம்!

நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு கொடுக்க தமிழக அரசு சிறப்புச் சட்டம் கொண்டுவரவுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கோப்புப் படம்

இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். சிறப்புச் சட்டத்தில் வழங்கப்படும் உள் ஒதுக்கீடு எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கும் பொருந்தும். இதற்கான சிறப்புச் சட்டம் கொண்டுவரப்படும். நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்து வருகிறோம்; அதற்கான சட்டப்போராட்டத்திலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது’’ என்றார்.

21 Mar 2020 2 PM

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

21 Mar 2020 3 PM

சமையல் சிலிண்டரில் கசிவு -தீ விபத்து!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தில் சுசிலா என்பவரின் கூரை வீட்டில் சமையல் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு இன்று காலை 12.30 மணி அளவில் வெடித்து சிதறியது. வெப்பம் மற்றும் அதிக காற்று வீசியதன் விளைவாக அருகில் இருந்த சங்கர், பூபதி என்பவர்களின் குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது.

தகவல் அறிந்த தீயணைப்பு வாகனங்கள், இரண்டு வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கூரை வீடு என்பதால் அத்தியாவசிய பொருட்கள், கையிருப்புக்காக வைத்திருந்த பணம் மற்றும் உடுத்துவதற்கு துணிகளும் தீயில் எரிந்து போனதால் அந்த ஏழை மக்கள் செய்வதறியாது தவித்தனர்.

திண்டிவனம் சார் ஆட்சியர் நேரில் வந்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களையும், விபத்தில் எரிந்த வீடுகளையும், சேதங்கனையும் பார்வையிட்டார். பின் பாதிக்கப்பட்ட 5 குடும்பத்தினருக்கும் தலா ரூ.5000, அரிசி, உடை மற்றும் 1 லிட்டர் மண்ணெய் ஆகியவற்றை நேரில் வழங்கினார். பின் பேசிய சார் ஆட்சியர், "இவை தற்காலிக நிவாரண நிதிகளே. ரேஷன்கார்டு, ஆதார்கார்டு மற்றும் படிப்பு சம்பந்தமான சான்றிதழ்கள் போன்றவற்றை உடனடியாக பெற்றுத்தர ஏற்பாடுகள் செய்யப்படும். கிராம நிர்வாக அலுவலர் மூலம் இழப்பீடுகள் மதிப்பீடு செய்யப்பட்டு அரசு மூலம் பெற்றுத்தர முடிந்த அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒருவருக்கு படிப்பிற்கு ஏற்றார் போல் அரசு பணி வழங்கிட வழிவகை செய்யப்படும்." என்று உறுதியளித்தார்.

21 Mar 2020 4 PM

300 -ஐ நெருங்கிய கொரோனா..!

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. சற்றுமுன் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 300 -ஐ நெருங்கியுள்ளது. தற்போது வரையில் 298 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

21 Mar 2020 5 PM

மேலும் மூவருக்குக் கொரோனா!

தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ``பாதிக்கப்பட்ட மூவரில் இருவர் தாய்லாந்து நாட்டிலிருந்து வந்தவர்கள். ஒருவர் நியூஸிலாந்து நாட்டில் இருந்து வந்தவர்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள 6 கொரோனா நோயாளிகளும் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

21 Mar 2020 6 PM

வீட்டில் இருந்தே பணி செய்யுங்கள்...!

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. எனினும் அசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளி ஆசிரியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவிட்டுள்ளது!

21 Mar 2020 10 PM

நெய்வேலி: கடைகளை 7 மணிக்குள் மூட உத்தரவு!

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நெய்வேலி நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் இரவு 7மணிக்குள் மூடிவிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

`ஆசிரியர்களும் வீட்டில் இருந்தே பணி செய்யுங்கள்..!’ - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை #NowAtVikatan

என்.எல்.சி இந்தியா நிறுவனம் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெய்வேலி வணிகர் சங்கம், நெய்வேலி நகரிய வணிகர் நல சங்கம், தினசரி அங்காடி வியாபாரிகள் நல சங்கம் ஆகிய வணிகர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் வருகின்ற 31ம் தேதி வரை மருந்தகங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் இரவு 7மணிக்குள் அடைத்திட முடிவெடுக்கப்பட்டது.

`ஆசிரியர்களும் வீட்டில் இருந்தே பணி செய்யுங்கள்..!’ - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை #NowAtVikatan

நெய்வேலியில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட என்எல்சி அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.இங்குள்ள என்எல்சி நிறுவனத்திற்கு சொந்தமான குடியிருப்புகளில் என்எல்சி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் நெய்வேலி நகர பகுதியில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காக்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானம்,வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் நெய்வேலியின் முக்கிய சாலைகள் கூட கொரோனா தொற்று அச்சத்தால் கூட்ட நெரிசலின்றி காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி பலரும் கொரோனா அச்சத்தால் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

`ஆசிரியர்களும் வீட்டில் இருந்தே பணி செய்யுங்கள்..!’ - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை #NowAtVikatan

பொதுமக்கள் எப்போதும் அதிகம் கூடும் இடமான நெய்வேலி ஜூப்லி பூங்கா, மெயின் பஜார், டெல்லி பஜார் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விடுப்புக்காக வெளியூர்களிலிருந்து வீடு திரும்பியுள்ள மாணவர்கள் & இளைஞர்களும் வெளியே எங்கும் செல்ல முடியாமல் பெறும் ஏமாற்றத்துடன் வீட்டிலேயே முடிங்கி கிடக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு