Published:Updated:
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா! #NowAtVikatan

21-03-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா!
தஞ்சை மாவட்டத்திலுள்ள 11 பள்ளிகளில், 143 பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் 66 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கும்பகோணம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஏற்கெனவே ஒரு ஆசிரியர், ஆறு மாணவிகளுக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், 1,200 மாணவர்களுக்குச் சோதனை செய்ததில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை மொத்தம் 168 ஆக உயர்ந்திருக்கிறது.
- குணசீலன்