Published:Updated:

`776 பாசிட்டிவ்; ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை!’- அமைச்சர் விஜயபாஸ்கர் #NowAtVikatan

கொரோனா
கொரோனா

21.5.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

21 May 2020 7 AM

16 லட்சத்தை தொடும் பாதிப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,82,660 லட்சமாக உயர்ந்துள்ளது; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,20,157ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,29,294ஆக உயர்ந்துள்ளது

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 15,91,991ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94,994ஆக உயர்ந்துள்ளது.

21 May 2020 5 PM

தமிழக அரசு அலுவலக செலவுகளில் 20% குறைக்க உத்தரவு!

தமிழக அரசு அலுவலகங்களுக்கான செலவுகளில் 20% குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு
தமிழக அரசு

அரசு செலவில் வெளிநாட்டுப் பயணம், மாநிலத்துக்குள் விமானப் பயணத்துக்குத் தடை, மதிய, இரவு உணவு உண்பதற்குத் தடை, விழாக்களில் நினைவுப் பரிசுகள் வழங்குவதற்குத் தடை உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

21 May 2020 6 PM

வி.பி.துரைசாமி பதவியைப் பறித்த தி.மு.க தலைமை!

வி.பி.துரைசாமி
வி.பி.துரைசாமி

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பி. துரைசாமி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அந்தப் பதவியில் அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டிருப்பதாக தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.ஜே.பி மாநிலத் தலைவர் முருகனை, துரைசாமி நேரில் சந்தித்திருந்த நிலையில், தி.மு.க இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

21 May 2020 7 PM

ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை!

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக இருக்கிறது.

சென்னையில் ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் புதிய தொற்று ஏற்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார். ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்புகளுன் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு