Published:Updated:

Tamil News Today: `ஒரே நாளில் 53,256 பேருக்கு தொற்று; 3 கோடியை நெருங்கும் மொத்த பாதிப்பு!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம்

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

21-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

21 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 53,256 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,99,35,221 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,422. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,88,135-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,88,44,199-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 7,02,887 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 78,190 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 28,00,36,898 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

21 Jun 2021 8 AM

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு! 

கடந்த மாதங்களில் உச்சத்திலிருந்த கொரோனா பரவல் தற்போது ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்திருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், தொடர்ந்து தளர்வுகள் வழங்கப்பட்டுவருகின்றன். இந்தநிலையில், இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

சென்னை பேருந்து
சென்னை பேருந்து

அதன்படி, நோய்த் தொற்றுப் பரவலின் அடிப்படையில், மாவட்டங்கள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகை 1-ல் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும். வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளுக்கும், கூடுதலான செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. வகை 3-ல் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி அரசுப் பேருந்து போக்குவரத்து இன்று தொடங்கியது.

அடுத்த கட்டுரைக்கு