Published:Updated:

CoronaVirus: தமிழகத்தில் 3.67 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 5,995 பேருக்குத் தொற்று! #NowAtVikatan

Corona
Corona

21-08-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

21 Aug 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,995 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,430 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,764 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை, 3,07,677 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 101 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 6,340 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா அச்சம்
கொரோனா அச்சம்

சென்னையில் மேலும் 1,282 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,282 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,757 ஆக அதிகரித்துள்ளது.

முதியவர்களுக்கு கொரோனா மட்டும் ஆபத்தல்ல... NCRB டேட்டா சொல்வது என்ன?
21 Aug 2020 1 PM

மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா நெகட்டிவ்!

நல்லகண்ணு
நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சலால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டது. இது குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கொரோனா இல்லை. அவர் இன்னும் 5 நாள்கள் மருத்துவமனையில் சிகிசை பெற்று வீடு திரும்புவார்” என்றார். மேலும் பாடகர் எஸ்.பி.பி குறித்து பேசிய அமைச்சர், `அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்’ என்றார்.

21 Aug 2020 1 PM

விநாயகர் சதுர்த்தி - உயர்நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

விநாயகர் சதுர்த்தி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதித்துள்ளது. மேலும் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஊர்வலம் நடத்த விதித்த தடையை தளர்த்த இயலாது எனவும் சென்னையை பொறுத்தவரையில் மெரீனா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கலாம் என்று கூறியுள்ளது.

21 Aug 2020 12 PM

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தனித் தேர்வருக்கு செப்டம்பரில் தேர்வு நடத்துவதால் 11ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்க கோரிய வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், ``11ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்?” என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. வரும் 25 -ம் தேதிக்கு முன்னதாக இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

21 Aug 2020 10 AM

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 68,898 பேருக்கு கொரோனா

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 29,05,824 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 68,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 983 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54,849 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21,58,947ஆகவும் உயர்ந்துள்ளது.

21 Aug 2020 9 AM

என்கவுண்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொலை!

காவல்துறை
காவல்துறை
மாதிரிப்படம்

சென்னை அயனாவரத்தில் கொலை வழக்கு ஒன்றில் ரவுடி சங்கரை போலீசார் பிடிக்கச் சென்றபோது, போலீசாரை சங்கர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடி சங்கர் உயிரிழந்தார். காலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு