Published:Updated:

சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்..!- தி.மு.க பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது #NowAtVikatan

21.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

கமல்- ஆர்.எஸ்.பாரதி
கமல்- ஆர்.எஸ்.பாரதி
21 Dec 2019 8 PM

மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது!

கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால், சென்னையில் டிச.23ஆம் தேதி நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் பங்கேற்கவில்லை என மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அழைப்பு விடுத்தால் திமுக பேரணியில் பங்கேற்போம் என கமல் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி கமலை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். இந்தநிலையில் தான் "தி.மு.க பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது" என மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

21 Dec 2019 1 PM

4 பேர் உடல்கள் மறுபிரேத பரிசோதனை

தெலங்கானாவில் திஷா வழக்கில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னவே கேசலு உட்பட நான்கு பேரின் உடல்கள் ஹைதராபாத் அரசு மருத்துவமனையின் பிணவறையில் உள்ளது.

21 Dec 2019 12 PM

இந்தியாவை ஜெர்மன் நாடாக மாற்ற முயற்சி!

சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்..!- தி.மு.க பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது
#NowAtVikatan

"இந்தியாவை ஜெர்மன் நாடாக மாற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒரு கூட்டம் கையிலெடுத்துள்ளது அதை தடுக்க வேண்டும். நாட்டில் வாழும் ஒருவன் குடிமகன் இல்லையென்றால் அதை அரசு தான் நிரூபிக்க வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்து அ.தி.மு.க.வுக்கு மனசாட்சி உறுத்தவில்லை. மனசாட்சி இருந்தால் தானே உறுத்தும் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தை பார்த்தாவது அ.தி.மு.க மனசாட்சி உறுத்தும் என நம்புகிறேன்" என புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.

21 Dec 2019 9 AM

சித்தராமையாவுக்கு மங்களூரு காவல்துறை நோட்டீஸ்!

சித்தராமையா
சித்தராமையா

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் இரண்டு பேர் பலியாகினர். காங்கிரஸ் தலைவர் சித்தராமையா அந்தப்பகுதிக்கு செல்லவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு மங்களூரு போலீஸ் கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். `சித்தராமையா வருகை சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும்' என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 Dec 2019 7 AM

உ.பி போராட்டத்தில் 6 பேர் பலி

சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்..!- தி.மு.க பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது
#NowAtVikatan

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நேற்று இரவு, உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் 20 மாவட்டங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு எதுவும் நடத்தவில்லை என்றும், இதுவரை 50 போலீஸார் காயமடைந்துள்ளதாகவும் என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.