Published:Updated:

`பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்!’ - உச்ச நீதிமன்றம் #NowAtVikatan

 பேரறிவாளன்
பேரறிவாளன்

22-01-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

22 Jan 2021 11 AM

ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்!

பேரறிவாளன்
பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3-4 நாள்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என் நேற்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஒருவாரத்தில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

22 Jan 2021 10 AM

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்  விஜயபாஸ்கர்!

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. தமிழகத்திலும் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்கிறார்கள். எனினும், பொதுமக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக ஓர் அச்சம் நிலவுகிறது. இந்தநிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்ஸின் தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், `தமிழகத்தில் 908-வது நபராக கோவாக்ஸின் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார். மேலும், `கோவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொண்டு எல்லோரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு