Published:Updated:

வெலிங்டன் டெஸ்ட் - நியூஸிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலை #NowAtVikatan

கேன் வில்லியம்ஸன்
கேன் வில்லியம்ஸன்

22.2.2020 | இன்றைய நிகழ்வுகளின் முக்கிய தொகுப்பு..!

22 Feb 2020 12 PM

வெலிங்டன் டெஸ்ட் - நியூஸிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலை

இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நியூஸிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது. நியூஸிலாந்து அணி இந்தியாவை விட 51 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

22 Feb 2020 10 AM

13 வணிக வளாகங்களுக்கு சென்னை மாநகராட்சி சீல்!

சென்னை புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் 13 வணிக வளாகம், 24 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உரிமமின்றி இயங்கியது, தொழில்வரி செலுத்தாதது உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

22 Feb 2020 8 AM

ஜம்முவில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

வெலிங்டன் டெஸ்ட் - நியூஸிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலை
 #NowAtVikatan

ஜம்மு காஷ்மீரின் பிஜ்பேஹரா அருகே சங்கம் பகுதியில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை. ஜம்மு பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்பினரிடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடி மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு