Election bannerElection banner
Published:Updated:

`ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம்!' - மத்திய அரசு #NowAtVikatan

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

22-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

22 Apr 2021 12 PM

`ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம்'

நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஆக்சிஜனுக்கு கடும் பற்றாகுறை ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தங்களுக்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி தரவேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில், மத்திய அரசு, ``ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம்” என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

22 Apr 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,14,835 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,59,30,965 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா டெஸ்ட்
கொரோனா டெஸ்ட்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,104. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,84,657-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,34,54,880 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 22,91,428 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 13,23,30,644 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

22 Apr 2021 9 AM

`துணை ராணுவம் தேவை!' - மக்கள் நீதி மய்யம்

``கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது, அ.தி.மு.க - தி.மு.க ஏஜென்ட்டுகளால் வன்முறை ஏற்பட வாய்ப்பிருப்பதால், வேறு மாநில போலீஸாரையும், துணை ராணுவத்தினரையும் ஈடுபடுத்தி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும்" என்று மக்கள் நீதி மையத்தைச் சேர்ந்தவர்கள், கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.

மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்
மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்

மக்கள் நீதி மையம் சார்பில் கரூரில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் மோகன்ராஜ், ``கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுயேச்சைகளாக இருவரின் ஆதரவாளர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் முகவர்கள் அங்கு அனுமதிக்கப்படுவார்கள். அதனால், வாக்கு எண்ணிக்கையின்போது, அங்கே பிரச்னை எழ வாய்ப்புள்ளது. அதனால், வாக்கு எண்ணிக்கையின்போது, வெளிமாநில போலீஸாரை நியமிக்க வேண்டும். கூடுதல் துணை ராணுவத்தினரையும் பாதுகாப்புப் பணியில் அமர்த்த வேண்டும்" என்றார்.

- துரை வேம்பையன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு