Published:Updated:

Tamil News Today: பிற மாநிலத்தவர்க்கு தமிழக அரசுப்பணி தவிர்க்கப்படும்-பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

22-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

22 Jun 2021 4 PM

'ஓ.என்.ஜி.சி அளித்த விண்ணப்பம் தமிழ்நாடு அரசால் நிராகரிப்பு' - அமைச்சர் தங்கம் தென்னரசு.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

நடந்துவரும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் அமைச்சர்களும், முதல்வரும் தங்கள் அரசின் திட்டங்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று சட்டமன்றத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அரியலூர் மற்றும் கடலூரில் 15 எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி அளித்த விண்ணப்பம் தமிழ்நாடு அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு விண்ணப்பித்தால் வல்லுநர் குழு அமைத்து பரிசீலக்கப்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

22 Jun 2021 4 PM

பிற மாநிலத்தவர்க்கு தமிழக அரசுப்பணி வழங்குவது தவிர்க்கப்படும்-பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

பிற மாநிலத்தவர்க்கு தமிழக அரசுப் பணி வழங்குவது தவிர்க்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் எப்படி பிற மாநிலத்தவர்களுக்கு தமிழக அரசுப் பணி வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

22 Jun 2021 4 PM

`ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி இல்லை’

Tamil News Today: பிற மாநிலத்தவர்க்கு தமிழக அரசுப்பணி தவிர்க்கப்படும்-பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.
22 Jun 2021 4 PM

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!

Tamil News Today: பிற மாநிலத்தவர்க்கு தமிழக அரசுப்பணி தவிர்க்கப்படும்-பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.
22 Jun 2021 4 PM

பிற மாநிலத்தவர்க்கு அரசுப் பணியில்லை!

Tamil News Today: பிற மாநிலத்தவர்க்கு தமிழக அரசுப்பணி தவிர்க்கப்படும்-பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.
22 Jun 2021 4 PM

போலி சாதிச்சான்று மோசடி: எம்.பி.பதவி பறிப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

நடிகை நவ்நீத் கவுர் ராணா தற்போது மகாராஷ்டிராவில் அமராவதி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். சுயேச்சை எம்.பி.யான நவ்நீத் கவுர் ராணாவின் கணவரும் சுயேச்சை எம்.எல்.ஏ.ஆவார். நவ்நீத் கவுர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி ரிசர்வ் தொகுதியாகும். இந்த தொகுதியில் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட நவ்நீத் கவுர் ராணா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தேர்தலில் போட்டியிட பட்டியலினத்தவர் என்று கூறி சாதிச்சான்றிதழ் தாக்கல் செய்தார். இந்த சான்றிதழ் போலியானது என்று கூறி சமூக சேவகர் ஆனந்த்ராவ் அந்துலே மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Navneet rana
Navneet rana

இம்மனு விசாரணைக்கு வந்த போது நவ்நீத் கவுரின் சான்றிதழை ஆய்வு செய்த உயர் நீதிமன்றம் நவ்நீத் கவுரின் சாதிச்சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டதோடு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. சாதிச்சான்றிதழ் போலியானது என்று நிரூபிக்கப்பட்டதால் நவ்நீத் கவுர் பதவி இழக்கும் அபாயம் ஏற்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து நவ்நீத் கவுர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இம்மனு நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இதில் மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், மகாராஷ்டிரா அரசு மற்றும் நவ்நீத் கவுருக்கு எதிராக புகார் செய்தவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதனால் பதவி பறிப்பு நடவடிக்கைகளில் நவ்நீத் கவுர் தப்பி இருக்கிறார். நவ்நீத் கவுர் அதிகமான தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார். நவ்நீத் கவுர் தனக்கு சிவசேனா எம்.பி. தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக நாடாளுமன்றத்தில் புகார் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடதக்கது.

- ஐயம்பெருமாள்

22 Jun 2021 12 PM

ஒன்பது மாநில முதல்வர்களுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு, மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் புதிய சட்ட முன்வடிவு குறித்து, கடலோர மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம், புதுச்சேரி முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மாநில அரசுகளின் நீண்டகால உரிமையைப் பறிக்கும் சட்ட முடிவை மாநிலங்கள் ஒன்றிணைந்து எதிர்க்க அழைப்பு விடுத்துள்ளார்.

22 Jun 2021 11 AM

செப்டம்பர் 15-ம் தேதிக்குள் முடிவுகளை அறிவிக்க வேண்டும்!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களில், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டபோதும், புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்தப் புதிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. தேர்தல் நடத்துவதோடு மட்டுமல்லாமல், செப்டம்பர் 15-ம் தேதிக்குள்முடிவுகளையும் அறிவிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

22 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 42,640 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட 90 நாள்களுக்குப் பிறகு, இந்தியாவில் தினசரி பாதிப்பு 50,000-க்கும் கீழ் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,99,77,861 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,167. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,89,302-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,89,26,038 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 6,62,521 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 81,839 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 28,87,66,201 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 86,16,373 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. உலகில், ஒரு நாடு ஒரே நாளில் இத்தனை பேருக்கு தடுப்பூசி போட்டது இதுவே முதன்முறை.

22 Jun 2021 7 AM

சட்டசபையில் இன்று..!

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சிங்காரச் சென்னை 2.0, பொருளாதார ஆலோசனைக்குழு, லோக் ஆயுக்தாவுக்கு புத்துயிர், மீண்டும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில், 16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டசபை
சட்டசபை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், இன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், காளியண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருக்கின்றன. தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறும். நடப்பு கூட்டத்தொடரின் இறுதி நாளான 24-ம் தேதி முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு பதில் உரை வழங்குவார்.

அடுத்த கட்டுரைக்கு