Published:Updated:

Corona Live Updates: `ஒரே நாளில் 5,849 பேருக்கு தொற்று; சேர்க்கப்பட்ட 444 மரணங்கள்!’ - தமிழகத்தில் கொரோனா

கொரோனா தொற்று
கொரோனா தொற்று ( Pixabay )

22.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

22 Jul 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,849 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,910பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,31,853 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 75 ஆக உள்ளது. இந்த நிலையில், மார்ச் 1-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444-ஐ இன்றையை மொத்த பலி எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா: `தமிழகத்தில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444’ - மருத்துவர் குழு அறிக்கை தாக்கல்

சென்னையில் மேலும் 1,171 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,171 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,561 ஆக அதிகரித்துள்ளது.

22 Jul 2020 3 PM

பரிசோதனை முடிவுகள் வரும் வரை வெளியே வரக்கூடாது!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி வரையிலும் 151 பேர் வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலை மாதத்தில் மட்டும் கடந்த 20 நாள்களில் 900 பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கொரோனா பாதித்தவர்களின் தொடர்பிலிருந்து பரிசோதனை மேற்கொண்டவர்கள் பலரும் பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பாகவே வெளியில் நடமாடி பலருக்கும் நோய்த் தொற்றைப் பரப்பி வருகிறார்கள் என்ற புகார் தொடர்ந்து எழுந்தது.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

இந்த நிலையில்தான், கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டவர்கள் பரிசோதனை முடிவு நெகட்டிவ் எனக் கிடைக்கும் வரையிலும் பிறர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை மீறிச் செயல்படுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

- மணிமாறன், புதுக்கோட்டை

22 Jul 2020 10 AM

ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா!

ராஜபாளையம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன்
ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன்

அவரின் மனைவி, மகன் ஆகியோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், தற்போது அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தமிழகத்தில் அமைச்சர்கள் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்திருக்கிறது.

22 Jul 2020 10 AM

இந்தியாவில் 12 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,92,915 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 37,724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Corona
Corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 648 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,732ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,53,050 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா: `எப்போதும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்!’ - விளக்கும் சி.எஸ்.ஐ.ஆர் தலைமை அதிகாரி
22 Jul 2020 10 AM

கொரோனா - உலக நிலவரம்!

corona
corona

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.39 லட்சம் பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 67,000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

ரோட்டில் குவிந்த கொரோனா நோயாளிகள்; பதறிய சுகாதாரத் துறையினர்! - ஊட்டி சர்ச்சை
அடுத்த கட்டுரைக்கு