Published:Updated:

சாத்தான்குளம்: `3 காவலர்களுக்கு ஆகஸ்ட் 5 வரை நீதிமன்ற காவல்!’ - நீதிபதி உத்தரவு #NowAtVikatan

சாத்தான்குளம் போலீஸார்
சாத்தான்குளம் போலீஸார் ( எல்.ராஜேந்திரன் )

22.7.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

22 Jul 2020 3 PM

ஆகஸ்ட் 5 -ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. விசாரணைக்காக 3 நாள் காவலில் எடுக்கப்பட்ட 3 காவலர்களை நாளை மாலை 4 மணிக்கு மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருந்தனர். இந்தநிலையில், சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனாத் தொற்று உறுதியானதையடுத்து, ஒருநாள் முன்னதாகவே, இன்று அவசர அவசரமாக சாத்தான்குளம் காவலர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் சாத்தான்குளம் காவலர்கள் மூவருக்கும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

22 Jul 2020 3 PM

சி.பி.ஐ அதிகாரிகளுக்கு கொரோனா!

சாத்தான்குளம் போலீஸார்
சாத்தான்குளம் போலீஸார்
எல்.ராஜேந்திரன்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. விசாரணைக்காக 3 நாள் காவலில் எடுக்கப்பட்ட 3 காவலர்களை நாளை மாலை 4 மணிக்கு மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருந்தனர். இந்தநிலையில், சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனாத் தொற்று உறுதியானதையடுத்து, ஒருநாள் முன்னதாகவே, இன்று அவசர அவசரமாக சாத்தான்குளம் காவலர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீதமுள்ள சி.பி.ஐ அதிகாரிகள் ஐவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

- இ.கார்த்திகேயன், எம்.கணேஷ்

22 Jul 2020 12 PM

`மதத் துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்!' - ரஜினிகாந்த்

கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காகத் தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரஜினி
ரஜினி

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த், ``கந்தசஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காகத் தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத் துவேசமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும்.

எல்லா மதமும் சம்மதமே! கந்தனுக்கு அரோகரா!’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

`ரஜினி முடிவை யாரால் மாற்ற முடியும்?!' - அமைச்சர் கருத்தின் பின்னணி
அடுத்த கட்டுரைக்கு