Published:Updated:

`கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி!’ - உயர் நீதிமன்றம் #NowAtVikatan

கோவை முந்தி விநாயகர் திருக்கோயில்
கோவை முந்தி விநாயகர் திருக்கோயில் ( தி.விஜய் )

22.8.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

22 Aug 2020 12 PM

கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி!

வீடுகளில் வழிபாடு செய்துவிட்டு, கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், `பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும்’ எனத் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. அதேபோல், தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துவரவும் தடைவிதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

ஆபத்சகாய விநாயகர், பிரளயம் காத்த பிள்ளையார்... 9 விநாயகர் திருத்தல மகிமைகள்!
22 Aug 2020 12 PM

எத்தனை நாள் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?

கனிமொழி
கனிமொழி
`இந்தி தெரியவில்லையா.. வெளியேறுங்கள்!' ஆயுஷ் பயிற்சி வகுப்பில் தமிழக மருத்துவர்களுக்கு நடந்தது என்ன?

கனிமொழி எம்.பி, ``மத்திய ஆயுஷ் அமைச்சகச் செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, `பயிற்சி வகுப்பில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம்' என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தித் திணிப்புக் கொள்கையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்பதால் அவமதிக்கப்படுவதைப் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?’ என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

22 Aug 2020 11 AM

முதுமலையில் விநாயகர் சதுர்த்தி!

விநாயகர் சதுர்த்தி விழா முதுமலையில் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயிலைச் சுற்றி வலம்வந்தும், கால்களை உயர்த்தியும் யானைகள் விநாயகரை வணங்கின. யானைகளுக்குச் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன.

- சதீஸ் ராமசாமி, படங்கள்: கே.அருண்

விநாயகர் சதுர்த்தியன்று இறைச்சிக்கடைகளுக்கு விடுமுறையா... அரசுத் தரப்பில் சொல்வது என்ன?
22 Aug 2020 11 AM

இந்தியாவில் கொரோனா - அப்டேட்ஸ்!

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 29,75,701 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 945 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 55,794-ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,22,578 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு