Published:Updated:

Corona: ஒரே நாளில் 5,337 பேருக்குத் தொற்று! - தமிழகத்தில் 5.52 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு #NowAtVikatan

கொரோனா
கொரோனா

22-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

22 Sep 2020 6 PM

தமிழகத்தில் 5.52 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,52,674-ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 8,947-ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 5,406 பேர் குணமடைந்திருக்கிறார்கள். குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,97,377-ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,57,614-ஆக அதிகரித்தது.

கொரோனா சீசன் 2... எப்படி சமாளிக்கிறது இத்தாலி பள்ளிகள்? - நேரடி ரிப்போர்ட்  #MyVikatan
22 Sep 2020 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

 கோவிட்-19
கோவிட்-19

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75,083 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 55,62,664 -ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,053 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்துள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 88,935-ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 44,97,868 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு