Published:Updated:

`தமிழகத்தின் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி #NowAtVikatan

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

22-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

22 Oct 2020 4 PM

தமிழகத்தின் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி!

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொரோனா தடுப்பூசி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ``கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், அரசு செலவில் தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்’’ என்று தெரிவித்தார்.

`பீகாரில் மட்டும்தான் இலவச கொரோனா தடுப்பூசியா?’ - சர்ச்சையான பா.ஜ.க தேர்தல் வாக்குறுதி
22 Oct 2020 1 PM

தமிழக அரசு மீது ராமதாஸ் `திடீர்’ விமர்சனம்!

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இருந்துவரும் நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அரசை நேரடியாக விமர்சித்திருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ராமதாஸ், ``ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள்!’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

22 Oct 2020 11 AM

அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து!

பீகார் சட்டமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. பிரசாரங்கள் ஒருபுறம் அனல் பறக்க, தேர்தலில் வெற்றிபெற கட்சிகள் வகுக்கும் யுத்திகளும் மறுபுறம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று பீகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முதல் தேர்தல் அறிவிப்பாக, தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இது தொடர்பாக பேசிய நிர்மலா சீதாராமன், ``கொரோனா தடுப்பு மருந்துக்கான அனுமதி கிடைத்ததும், தயாரிப்புகள் வேகம் பெறும். அப்படி கிடைக்கும் மருந்துகள், பா.ஜ.க கூட்டணி வென்று வந்தால் பீகாரின் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்” என்றார். அடுத்த ஐந்து ஆண்டுகள் நிதீஷ் குமார் முதல்வராக இருக்க பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு