Published:Updated:

`தபால் வாக்கு வசதி... கூடுதல் வாக்குச்சாவடிகள்; முன்கூட்டியே வாக்குப்பதிவா?!’ - தேர்தல் ஆணையம் விளக்கம் #NowAtVikatan

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

22-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

22 Dec 2020 2 PM

தேர்தல் ஆணைய அதிகாரிகள், செய்தியாளர்கள் சந்திப்பு!

இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நேற்றும் இன்றும் ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று நடைபெற்ற முதல்நாள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்து, தங்கள் கோரிக்கைகள் முன்வைத்தனர். அவர்களில் அ.தி.மு.க., தேர்தலை ஏப்ரல் மாத இறுதியில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்கள் சந்திப்பு!
செய்தியாளர்கள் சந்திப்பு!

இந்தநிலையில், இன்று இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், ``தேர்தலைச் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்துவதே இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை. கொரோனா காலகட்டத்தில் பீகார் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பதற்கு இப்போது பதில் சொல்ல முடியாது. 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி செய்து தரப்படும்.

செய்தியாளர்கள் சந்திப்பு!
செய்தியாளர்கள் சந்திப்பு!

ஒரு வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளர்களுக்கு அதிகமாகாமல், கூடுதல் வாக்குச்சாவடி அமைக்கப்படும். மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். பெரும்பாலான அரசியல் கட்சிகள் தமிழகத்தில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரேகட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவிக்கப்படும்.

செய்தியாளர்கள் சந்திப்பு!
செய்தியாளர்கள் சந்திப்பு!

மாநிலத்தில் பணப் பட்டுவாடா நடைபெறாமல் இருப்பதை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். பணப் பட்டுவாடாவைத் தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம்தான் இருக்கிறது.அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்” என்றனர்.

22 Dec 2020 11 AM

`97 பக்க புகார் பட்டியல்’ -ஆளுநரிடம் வழங்கிய ஸ்டாலின்

தமிழகத்தில் தேர்தல் களம் தற்போது பரபரப்பாக இயங்கிவருகிறது. பெரும்பான்மையான கட்சிகளும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டன. இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தமிழகத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்கள். இந்தப் பரபரப்பான சூழலில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் இன்று தமிழக ஆளுநரைச் சந்தித்துப் பேசினார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

அப்போது அவர் தமிழக ஆளுநரிடம், தமிழக அரசு மீதான முறைகேடுப் பட்டியலை வழங்கினார். ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ``தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிலவுகிறது. நாங்கள் அளித்த புகார்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் ஆளுநரிடம் மனுவாக வழங்கினோம். 97 பக்க புகார் பட்டியலை ஆளுநரிடம் வழங்கியிருக்கிறோம். விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்” என்றார். இந்தச் சந்திப்பில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த கட்டுரைக்கு