Published:Updated:

தமிழகத்தில் மேலும் 54 பேருக்குக் கொரோனா.. சென்னையில் 400-ஐ தொட்ட பாதிப்பு! - #Coronaupdates #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

23.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

23 Apr 2020 9 AM

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,345 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,345 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 47,663 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அமெரிக்காவில் புதிதாக 29,991 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,48,735 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் 26.36 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,84,186 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேநேரம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,17,619 ஆக உயர்வு.

23 Apr 2020 9 AM

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

வரும் 27-ம் தேதி, மீண்டும் மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த மாதம் 20-ம் தேதி, முதன்முதலாக முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பிறகு, கடந்த 11-ம் தேதி இரண்டாவது முறையாக முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 27-ம் தேதி நடக்கும் ஆலோசனையில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து மாநில முதலமைச்சர்களிடம் ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

23 Apr 2020 1 PM

ஐசிஎம்ஆர் விளக்கம்

ரேபிட் டெஸ்ட் தவறான முடிவுகளைத் தருகிறது என்கிற சர்ச்சை எழுந்ததை அடுத்து, 2 நாள்கள் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் எனக் கூறியிருந்தது. இந்த நிலையில் இதுதொடர்பாக ஐசிஎம்ஆர் விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது. மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ``கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு ANTIBODY எனப்படும் பிறபொருளெதிரி உருவாவதைக் கண்டறியவே ரேபிட் டெஸ்ட் கிட். கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம்; கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம்" மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

23 Apr 2020 5 PM

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கடும் கண்டனம்!

கொரோனா வைரஸ் காரணாமாக லாக் டெளன் உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 18 மாதகாலத்துக்கு பஞ்சப்படி கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 54 பேருக்குக் கொரோனா.. சென்னையில் 400-ஐ தொட்ட பாதிப்பு! - #Coronaupdates #NowAtVikatan

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் என்.ராஜகோபால், ``கொரோனா கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு காரணமாக விளிம்புநிலை மக்கள் கடும் துயருக்கு ஆளாகியுள்ளனர். கோடிக்கணக்கான தினக்கூலிகள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சம்பள வெட்டு, பகுதி வேலை இழப்பு, வேலை இழப்பு ஆகிய கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். சிறு குறு நடுத்தர தொழில்கள் கடுமையான சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்டெடுக்கவும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுடைய வேலையைப் பாதுகாக்கவும் மத்திய அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த நிலையை எதிர்கொள்ள கார்ப்பரேட்டுகளிடமிருந்து கூடுதல் வரி வசூலிக்க வேண்டும். அதை விடுத்து தொழிலாளர்களின் சம்பளத்தில் கைவைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 18 மாதகாலத்துக்கு பஞ்சப்படி கட் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. ஏற்கெனவே கடுமையான பொருளாதார சூழலை எதிர்கொண்டு அரசு பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு அவர்களுக்குரிய பஞ்சப்படியை மறுக்கும் மத்திய அரசின் அறிவிப்பை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மத்திய அரசாங்கம் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வில்லை என்றால் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்” என்றார்.

23 Apr 2020 5 PM

ரஜினிகாந்த் உதவி

கொரோனாவால் திரைத்துறை பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. படப்பிடிப்புகள் நடைபெறாததால், தொழிலாளர்கள் பலரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அவர்களுக்குத் திரை பிரபலங்கள் உதவிய நிலையில் நலிந்த கலைஞர்களுக்கும் உதவ வேண்டும் எனக் கோரிக்கை குரல் எழுந்தது.

இந்த நிலையில் உதவி இயக்குநர்கள், நலிந்த கலைஞர்கள் 1,500 பேருக்கும், சினிமாத்துறை சார்ந்த சங்கங்களுக்கும் சுமார் 24 டன் எடை உள்ள அத்தியாவசியப் பொருள்களை கொரோனா நிவாரணமாக வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த். வேலையில்லாததால் உணவின்றி வாடும் பல கலைஞர்களின் குடும்பங்களுக்கு இதன் மூலம் உணவு தர முடியும் என்கிறார்கள்.

23 Apr 2020 6 PM

சென்னையில் 400 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் 54 பேருக்குக் கொரோனா.. சென்னையில் 400-ஐ தொட்ட பாதிப்பு! - #Coronaupdates #NowAtVikatan

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 54 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 27 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக இருக்கிறது. மேலும் இன்று ஒரே நாளில் 90 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 752 ஆக இருக்கிறது. மேலும் இரண்டு பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு