Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 78 பேர் பலி - முழுத் தகவல் #NowAtVikatan

கொரோனா டெஸ்ட்
கொரோனா டெஸ்ட்

23-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

23 Apr 2021 7 PM

13,000-ஐ கடந்தது தமிழகத்தின் ஒரு நாள் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் 13,776 பேர். 78 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 95,048 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்றைய எண்ணிக்கையைவிட அதிகம்.

சென்னையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. சென்னையில் ஒரு நாள் பாதிப்பு , 3,842-ஆகப் பதிவாகியிருக்கிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 37 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 31,170 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 8,078 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
23 Apr 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,32,730 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,62,63,695 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா மரணங்கள்
கொரோனா மரணங்கள்
Representational Image

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,263. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,86,920-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,36,48,159 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 24,28,616 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 13,54,78,420 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு