Published:Updated:

Corona Live Updates: `24 மணி நேரத்தில் 6,000-த்தை கடந்த பாதிப்பு; 60,000-த்தை கடந்த பரிசோதனை!’ - தமிழக நிலவரம்

கொரோனா தொற்று
கொரோனா தொற்று ( Pixabay )

23.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

23 Jul 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 6,472 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,000-த்தை கடப்பது இதுவே முதல் முறை. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,210 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,36,793 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 88 ஆக உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 3,232ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 60,375 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் தமிழகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Corona Live Updates: `24 மணி நேரத்தில் 6,000-த்தை கடந்த பாதிப்பு; 60,000-த்தை கடந்த பரிசோதனை!’ - தமிழக நிலவரம்

சென்னையில் மேலும் 1,336 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,336 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,900 ஆக அதிகரித்துள்ளது.

23 Jul 2020 5 PM

எம்.எல்.ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று!

கொரோனா
கொரோனா

தூத்துக்குடி சட்ட மன்றத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தி.மு.க-வைச் சேர்ந்த கீதா ஜீவன் தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரின் மகள், மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மூவரும் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

கார்த்திகேயன், தூத்துக்குடி

23 Jul 2020 11 AM

பேராவூரணி எம்.எல்.ஏ கோவிந்தராசுவுக்கு கொரோனா!

எம்.எல்.ஏ கோவிந்தராசு
எம்.எல்.ஏ கோவிந்தராசு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தராசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உதவியாளருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், தமிழகத்தில் அமைச்சர்கள் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்திருக்கிறது.

23 Jul 2020 9 AM

இந்தியாவில் 12 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,39,684 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 45,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

corona
corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 29,861ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,53,050 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா: `தமிழகத்தில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444’ - மருத்துவர் குழு அறிக்கை தாக்கல்
23 Jul 2020 9 AM

கொரோனா - உலக நிலவரம்!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,53,71,836 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 93.43 லட்சமாக அதிகரித்திருக்கிறது. 6.29 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Corona Tests
Corona Tests
Pixabay

அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 41,00,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் 71,501 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

கொரோனா: `வெட்ட வெளியில் மருத்துவக் கழிவுகள்; இழுத்துச் செல்லும் குரங்குகள்!' - அச்சத்தில் ஊட்டி
அடுத்த கட்டுரைக்கு