Published:Updated:

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகள் ரத்து! - முதல்வர் உத்தரவு #NowAtVikatan

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

23.7.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

23 Jul 2020 7 PM

ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு புதிய வாய்ப்பு!

ஆவின் பால்
ஆவின் பால்

ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு ஆவின் பால் முகவர்களாக வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வேலையிழந்து தவிப்பவர்களின் வாழ்வாதாரம் காக்க தமிழக அரசு இந்த புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுநர்களை நியமிக்கிறது ஆவின் நிறுவனம்.

23 Jul 2020 10 AM

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து!

கல்லூரி இறுதியாண்டு பருவத் தேர்வுகள் தவிர மற்ற பருவத் தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார்.

மாணவர்கள்
மாணவர்கள்
Representational Image

கொரோனா முழு ஊரடங்கால் தமிழகத்தில் ஏற்கெனவே 10-ம் வகுப்புத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன. அதேபோல், சி.பி.எஸ்.இ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்தநிலையில், பொறியியல் மற்றும் கலை அறிவியல் பிரிவு கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

`கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம்!’ - மத்திய அரசு அறிவிப்பு
முதல்வர் அறிக்கை
முதல்வர் அறிக்கை

இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பரில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

+2 தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கலாம்? #VikatanPollResults
அடுத்த கட்டுரைக்கு