Election bannerElection banner
Published:Updated:

பாலியல் குற்றச்சாட்டு: சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் #NowAtVikatan

ஐ.பி.எஸ் அதிகாரி மீது பாலியல் புகார்
ஐ.பி.எஸ் அதிகாரி மீது பாலியல் புகார்

24-02-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

24 Feb 2021 7 PM

பாலியல் குற்றச்சாட்டு: சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தமிழக சட்டம், ஒழுங்கு பிரிவு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்கக் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு ராஜேஷ் தாஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையின் சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

24 Feb 2021 5 PM

பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகார்... விசாரணைக்குழு அமைத்த தமிழக அரசு

சட்டம், ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரை விசாரிக்கக் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஆறு பேர்கொண்ட குழுவில் ஏ.டி.ஜி.பி சீமா அகர்வால், ஐ.ஜி அருண், டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரி உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கிறார்கள். உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த விசாரணைக்குழு விசாரிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

24 Feb 2021 11 AM

`ஒன்றாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்போம்’- சசிகலா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, சென்னை தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்திய சசிகலா, ``ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்போம். விரைவில் தொண்டர்கள், மக்களை சந்திக்கவிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

24 Feb 2021 10 AM

எடப்பாடியில் பழனிசாமி; போடிநாயக்கனூரில் பன்னீர்செல்வம்?

தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல்களில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க கட்சித் தலைமையகத்தில் இன்று முதல் விருப்ப மனுவைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கிவைத்தனர்.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

இதற்கிடையே வரும் சட்டமன்றத் தேர்தலில், சேலம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மீண்டும் போட்டியிட இன்று விருப்ப மனு அளித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

24 Feb 2021 9 AM

தமிழகத்தில் தேர்தல் எப்போது?

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கெனவே நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

இந்தநிலையில், தேர்தல் தேதிகளை இறுதிசெய்வது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் குறித்து சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. எந்தெந்த மாநிலங்களில், எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது, தேர்தல் தேதிகளை இறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு