Published:Updated:

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்; 1755 ஆக அதிகரித்த எண்ணிக்கை #NowAtVikatan

கோவிட் -19 கொரோனா வைரஸ்
கோவிட் -19 கொரோனா வைரஸ்

24.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

24 Apr 2020 6 PM

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

24 Apr 2020 4 PM

24 மணிநேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா!

கோவிட் -19 கொரோனா
கோவிட் -19 கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,684 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,077ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்தியா முழுவதும் கடந்த 14 நாள்களில் 80 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 Apr 2020 2 PM

முழு ஊரடங்கு!

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26-ம் தேதி காலை முதல் 29-ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 5 மாநகராட்சிகளைத் தவிர பிற இடங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 Apr 2020 1 PM

பிரதமர் மோடி பேச்சு!

நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது பேசியவர், ``கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது. நாம் அனைவரும் வேலை செய்யும் முறையையே மாற்றிவிட்டது. நாம் எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பதை கொரோனா பரவல் சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா கொள்ளை நோய் நமக்கு சுயசார்புத்தன்மையைப் போதித்துள்ளது.கொரோனா நம் அன்றாட வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுள்ளது கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் நாம் தீவிரமாக இறங்க வேண்டும். கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான வளர்ச்சி இடைவெளியைக் குறைக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

24 Apr 2020 11 AM

24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா!

தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,077- ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 718 - ஆகவும் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறையின் அதிகாரபூர்வ கொரோனா இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325லிருந்து 4,749 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது; 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு