Published:Updated:

டெல்லி: மீண்டும் செயல்படத் தொடங்கியது எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு! #NowAtVikatan

எய்ம்ஸ்
எய்ம்ஸ்

24-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

24 Apr 2021 3 PM

`டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக மூடல்?’

எய்ம்ஸ்
எய்ம்ஸ்

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருத்துவ ஆக்ஸிஜனின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுபாடு காரணமாக சிகிச்சையில் சிக்கல் எழுந்த நிலையில், தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் காரணமாக அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய நோயாளிகள் யாரையும் அனுமதிக்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிறிது நேரத்துக்குப் பின்னர் ஆக்ஸிஜன் சப்ளை மீண்டும் தொடங்கியதால், எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்படத் தொடங்கியது!

24 Apr 2021 11 AM

`இளநீர், நுங்கு, தர்பூசணி’ - விஜய் மக்கள் இயக்கம்

கோடைக்கால தண்ணீர் பந்தல்
கோடைக்கால தண்ணீர் பந்தல்
ம.அரவிந்த்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பட்டுக்கோட்டையில் திறக்கப்பட்ட கோடைக்கால தண்ணீர்ப் பந்தலில் இளநீர், நுங்கு, தர்பூசணி எனப் பலவற்றை வைத்து அசத்தினர். தொடர்ந்து 30 நாள்களுக்கு குடிக்க தண்ணீருடன் சேர்த்து தர்பூசணிப் பழம் வைக்கவிருப்பதாகவும் `இதனால் பொதுமக்களின் தாகம் தீரும், எங்கள் மனம் குளிரும்’ என அதன் நிர்வாகிகள் நெகிழ்வுடன் தெரிவித்துள்ளனர்.

- குணசீலன்

24 Apr 2021 11 AM

`கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்’

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, மாநிலங்களுக்கு 50% தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கும் என்றும், தேவைக்கு மாநில அரசுகள் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் கொள்முதல் விலையைவிட மாநில அரசுக்கு அதிக விலை நிர்ணையம் செய்யப்பட்டது சர்ச்சை ஆனது.

இந்தநிலையில், `இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளையும் மத்திய அரசு ஒரு டோஸுக்கு 150 ரூபாய் எனக் கொள்முதல் செய்கிறது. அதை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்’ என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

24 Apr 2021 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,66,10,481என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,624. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,89,544-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,38,67,997-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 25,52,940 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 13,83,79,832 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு