Published:Updated:

`என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; விரைவில் உருமாறிய ம.நீ.ம-வைக் காண்பீர்கள்’ - கமல்ஹாசன் அதிரடி #NowAtVikatan

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

24-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

24 May 2021 4 PM

விலகிச் சென்றவர்கள்... கமல்ஹாசன் பதில்!

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகினர். இந்தநிலையில், அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ``என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் 11உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள்’’ எனவும் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

24 May 2021 3 PM

பாலியல் புகார்: ஆசிரியரிடம் விசாரணை!

சென்னையின் பிரபல தனியார் பள்ளியான பி.எஸ்.பி.பி-யில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்புக்கு வந்ததாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பள்ளியின் டீனுக்கு புகார் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் கனிமொழி எம்.பி-யும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

`நீ அழகாக இருக்கிறாய், சினிமாவுக்குப் போகலாமா' - பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர்மீது பாலியல் புகார்

இந்தநிலையில், ஆசிரியர் ராஜகோபாலனை தமிழக காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்திவருகிறார்கள். அவரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அந்தப் பணிக்கு விசாரணைக்கு வந்த குழந்தைகள்நல பாதுகாப்பு அலுவலரை பள்ளியின் உள்ளே அனுமதிக்காதது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது. பள்ளியில் சில அட்மின் பணியாளர்கள் மட்டுமே பணியில் இருப்பதாகச் சொல்லி அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே பள்ளி நிர்வாகம், ஆசிரியர் ராஜகோபாலனை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

24 May 2021 2 PM

ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மரணம்

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன் (83) இன்று காலமானார்.

துரை பாலகிருஷ்ணன்
துரை பாலகிருஷ்ணன்
24 May 2021 2 PM

பாலியல் தொல்லை - `ஆசிரியர்மீது   நடவடிக்கை எடுக்கப்படும்!'

சென்னையின் பிரபல தனியார் பள்ளியான பி.எஸ்.பி.பி-யில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அரை நிர்வாணமாக ஆன்லைன் வகுப்புக்கு வந்ததாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. அவரைக் கைதுசெய்து விசாரிக்க போலீஸ் தீவிரமாக இருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனியார் பள்ளியிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

PSBB பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு... ட்விட்டரில் குவியும் மாணவர்களின் புகார் பட்டியல்!
24 May 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 2,22,315 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,67,52,447 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,454. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,03,720-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
மாதிரிப் படம்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,37,28,011-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 27,20,716 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,02,544 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 19,60,51,962 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

24 May 2021 7 AM

அமலுக்கு வந்தது தளர்வுகள் இல்லா ஊரடங்கு!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவந்த நிலையில் இன்று முதல் தளர்வுகள் அல்லாத ஊரடங்கு அமலுக்கு வந்தது. கடந்த 14 நாள்களாக அமலில் இருந்த ஊரடங்கில் காலை 10 மணி வரையிலும் மளிகைக் கடைகள் திறந்திருந்தன. அதைக் காரணமாகவைத்து மக்கள் பலர் சாலைகளில் சுற்றித் திரிந்ததாகச் சொல்லப்பட்டது. இந்தநிலையில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

ஊரடங்கு - மூடப்பட்ட கன்னியாகுமரி சுற்றுலாத்தலங்கள்
ஊரடங்கு - மூடப்பட்ட கன்னியாகுமரி சுற்றுலாத்தலங்கள்
ரா.ராம்குமார்

ஊடகத்துறை, பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், தண்ணீர் விநியோகம் போன்ற மிகவும் அவசியமான ஒரு சில பணிகளுக்கு மட்டுமே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட நபரைத் தவிர வேறு யாரேனும் சாலைகளில் தேவையின்றி வலம் வந்தால் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

தமிழகத்தில் இந்த ஒரு வார காலத்துக்கு எவையெல்லாம் இயங்கும்..? பதில் கீழே..!

அறிவிப்பு
அறிவிப்பு
அடுத்த கட்டுரைக்கு