Published:Updated:

தமிழகத்தில் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 2,865 பேருக்கு தொற்று; குணமடைந்தோர் எண்ணிக்கை 2,424 #NowAtVikatan

கொரோனா
கொரோனா

24.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

24 Jun 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்!

தமிழகத்தில், இன்று மட்டும் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,468-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,654 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,814 அதிகரித்துள்ளது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில், கொரோனா நோய்த் தொற்றால் ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 866 -ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,424 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

24 Jun 2020 5 PM

முதல்வர் பழனிசாமி உரை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அரசு எடுத்துள்ள முடிவுகள் குறித்து பேசினார் முதல்வர். அப்போது அவர், `நாளை முதல் வரும் 30 -ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. அதாவது மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் தேவை. மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால்தான் கொரோனாவை வீழ்த்த முடியும்’ என்றார்.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசிய முதல்வர், ``கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்றார்.

24 Jun 2020 5 PM

யுஜிசி பரிந்துரை!

தமிழகத்தில் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 2,865 பேருக்கு தொற்று; குணமடைந்தோர் எண்ணிக்கை 2,424  #NowAtVikatan

பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு யுஜிசி-யின் நிபுணர்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அக்டோபர் மாதம் வரை புதிய மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டாம் எனவும் பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது.

24 Jun 2020 3 PM

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு!

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார். மேலும், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வரவும் மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்படுள்ளதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் சுமார் 1,500 கூட்டுறவு வங்கிகள் உள்ள நிலையில் வாடிக்கையாளர்களின் முதலீட்டை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

24 Jun 2020 1 PM

போலி இ-பாஸ்: தலைமைச் செயலக ஊழியர் உட்பட 5 பேர் கைது!

இ-பாஸ்
இ-பாஸ்

போலி இ-பாஸ் தயாரித்து வழங்கியதாக தலைமைச் செயலக ஊழியர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி ஊழியர் ஒருவர், மாவட்ட ஆட்சியரக ஊழியர் ஒருவர் உட்பட கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் அரசு ஊழியர்கள் ஆவார்.

E Pass: களத்தில் இறங்கிய ஜூனியர் விகடன்; சிக்கிய போலி E Pass கும்பல்! #VikatanExclusive
24 Jun 2020 10 AM

24 மணிநேரத்தில் 15,968 பாசிட்டிவ்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,40,215லிருந்து 4,56,183 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 15,968 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 465 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,011-லிருந்து 14,476 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685 ஆகவும் உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 93,45,569 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பிலிருந்து 50,36,723 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,78,949ஆக உயர்ந்துள்ளது.

இந்திய பிரதமர்... தமிழக முதல்வர்... கொரோனா பாதுகாப்பு வளையம் எப்படி?
அடுத்த கட்டுரைக்கு