Published:Updated:

Corona Live Updates: `ஒரே நாளில் 6,785 பேருக்குத் தொற்று!’ - தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

கொரோனா
கொரோனா

24.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

24 Jul 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 6,785 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 6,000-த்தை கடந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,749. ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,504 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,43,297 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 88 ஆக உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 63,182 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் தமிழகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Corona Live Updates: `ஒரே நாளில் 6,785 பேருக்குத் தொற்று!’ - தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

சென்னையில் மேலும் 1,299 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,299 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92,206 ஆக அதிகரித்துள்ளது.

24 Jul 2020 12 PM

எஸ்.எஸ்.ஐ பால்துரை, 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா!

பால்துரை
பால்துரை

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கை விசாரித்து வரும் 2 சி.பி.ஐ அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்கெனவே கண்டறியப்பட்டது. இந்தநிலையில், மேலும் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கும் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டிருக்கிறது.

சாத்தான்குளம்: `கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிபிஐ அதிகாரிகள்!’ - விசாரணை பாதிப்பு
24 Jul 2020 10 AM

இந்தியாவில் 13 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 49,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

corona
corona
Unsplash

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 740 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,601ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,17,209 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா: `நிமிடத்துக்கு 43 பேர்; மணிக்கு 2,600 பேர்!’ - பாதிப்பால் திணறும் அமெரிக்கா
24 Jul 2020 10 AM

கொரோனா - உலக நிலவரம்!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,40,155 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 95,28,714 ஆக அதிகரித்திருக்கிறது. 6,32,173 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Corona spread
Corona spread
Unsplash

அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் 76,00 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இறந்தவர்கள் எண்ணிக்கை 1,44,000 ஆக இருக்கிறது. அங்கு 40 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

`குடும்ப உறுப்பினர்களால் அதிகம் பரவிய கொரோனா!' - அதிர்ச்சி கொடுத்த ஆய்வு
அடுத்த கட்டுரைக்கு