Published:Updated:

‘என்.ஆர்.சியை அமல்படுத்தும் திட்டம் இப்போது இல்லை!’ - அமித் ஷா #NowAtVikatan

24.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

அமித் ஷா
அமித் ஷா
24 Dec 2019 7 PM

 என்.ஆர்.சியை அமல்படுத்தும் திட்டம் இப்போது இல்லை!

“தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவை இரண்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெளிவாகக் கூறுகிறேன். தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ விவாதிக்கவில்லை. தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இப்போது இல்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

24 Dec 2019 6 PM

27 மாவட்டங்களுக்கு விடுமுறை

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30-ஆம் தேதிகளில் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கல்விநிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

24 Dec 2019 4 PM

முப்படைகளுக்கு தலைமை தளபதி

மோடி
மோடி

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் முப்படைகளுக்கு தலைமைத் தளபதி பொறுப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ரயில்வே வாரியத்தை மறுசீரமைப்பு செய்யவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

24 Dec 2019 11 AM

ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர்!

தமிழக சட்டப்பேரவை ஜனவரி மாதம் 6 -ம் தேதி கூடும் என பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இந்த கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24 Dec 2019 7 AM

மரணதண்டனையை வரவேற்ற அமெரிக்கா!

`வெட்டப்பட்ட விரல்கள்; அமிலத்தில் கரைக்கப்பட்ட உடல்!’- கஷோகி கொலையில் சவுதியின் தீர்ப்பு

சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 2-ம் தேதி சென்றார். பிறகு, அவர் திரும்பி வரவேயில்லை. இதையடுத்து, ஜமால் கொலை செய்யப்பட்டுவிட்டதாக துருக்கி அறிவித்தது. ஜமால் கஷோகி சவுதி தூதரகத்தில்தான் கொல்லப்பட்டார் என்பதை சவுதி அரசு ஒப்புக்கொண்டது. பத்திரிகையாளர் கஷோகி கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனையும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சவுதி அரசு வழங்கிய இந்தத் தீர்ப்பை அமெரிக்கா வரவேற்றுள்ளது. நீதியை உறுதி செய்வதில் இது மிக முக்கியமான இடம் என இந்தத் தீர்ப்பை அமெரிக்கா பாராட்டியுள்ளது.