Published:Updated:

`நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா!’ - டி.டி.வி.தினகரன் ட்வீட் #NowAtVikatan

சசிகலா
சசிகலா

25-01-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

25 Jan 2021 10 PM

தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்; எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது!

மத்திய அரசின் பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்

அனிதா- விளையாட்டுத் துறை

ஸ்ரீ சுப்பு ஆறுமுகம்- கலைத்துறை

சாலமன் பாப்பையா- தமிழறிஞர், கல்வி

பாப்பம்மாள்- விவசாயம்

பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்- கலைத்துறை

எஸ்.பி.பி.
எஸ்.பி.பி.

சிவசங்கர்- கலைத்துறை

மராச்சி சுப்புராமன்- சமூக சேவை

சுப்பிரமணியன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை

திருவேங்கடம் வீரராகவன்- மருத்துவம்

ஸ்ரீதர் வேம்பு- வர்த்தகம் மற்றும் தொழில்துறை

25 Jan 2021 6 PM

நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா, விரைவில் விடுதலை ஆவார் என கூறப்பட்ட நிலையில், டி.டி.வி. தினகரன் அது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், ``நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி சசிகலா நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாகக் குறைந்து, அவர்கள் உடல்நிலை தேறிவருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையிலிருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ட்வீட் செய்திருக்கிறார்.

25 Jan 2021 10 AM

`சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்திருக்கிறது!’

சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சையிலிருக்கும் சசிகலா உடல்நிலை குறித்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

சசிகலா
சசிகலா

அதில், ``சசிகலா உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு கொரோனா தொற்று குறைந்திருக்கிறாது. சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதால் இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. தற்போது அவரால் சிரமமின்றி அமர முடிகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சசிகலா உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு