Published:Updated:

`கண்டதும் சுட உத்தரவு?!' - டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த அதிரடி #NowAtVikatan

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

25-02-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...

25 Feb 2020 9 PM

கண்டதும் சுட உத்தரவு?!

டெல்லியில் தொடர் வன்முறை நிகழ்ந்து வருவதை தொடர்ந்து டெல்லியில் யமுனா விஹார் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என டெல்லி போலீஸ் ஒலிபெருக்கி மூலம் கலவர பகுதிகளில் அறிவித்து வருகின்றனர். ஏற்கனவே கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஐ தொட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தத் தகவலை டெல்லி காவல்துறை மறுத்திருக்கிறது.

25 Feb 2020 8 PM

சாகித்ய அகாடமி விருதுபெற்றார் சோ தர்மன்!

`கண்டதும் சுட உத்தரவு?!' - டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த அதிரடி #NowAtVikatan

2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் 'சூல்' நாவலுக்காக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவ்விருதை சாகித்ய அகாடமி தலைவர் சந்திரசேகர் கம்பர் வழங்கினார். டெல்லி காமனி அரங்கில் நடைபெற்ற விருது விழாவில் சாகித்ய அகாடமி தலைவர் சந்திரசேகர் கம்பர் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்கள் அனைவருக்கும் விருதும் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கிச் சிறப்பித்தார்.

சாகித்ய அகாடமி விருது மத்திய அரசால் இந்திய மொழி இலக்கியங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். ஒவ்வொரு ஆண்டும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டன. தமிழ்மொழிப் பிரிவின் விருதுக்கான இறுதிச்சுற்றில் மொத்தம் 7 நபர்கள் இருந்தனர். முடிவில் எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய 'சூல்' நாவலுக்கு அவ்விருது அறிவிக்கப்பட்டது. இது அவருடைய முதலாவது சாகித்ய அகாடமி விருதாகும்.

தென்தமிழக மக்களின் வேளாண்மையோடு இரண்டறக் கலந்த வாழ்வையும், அவர்களது இயற்கை பற்றிய புரிதலையும், நீர் மேலாண்மை பற்றிய ஆழ்ந்த அறிவையும் விளக்குவதோடு தற்கால அறிவியலால் ஏற்படும் சூழல் மாற்றமும் மண்மணத்தோடு எடுத்துரைக்கிறது 'சூல்'.

- தமிழ் பரதன்

25 Feb 2020 5 PM

பாலியல் வழக்கில் ஹார்வி வெயின்ஸ்டீன் குற்றவாளி!

`கண்டதும் சுட உத்தரவு?!' - டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த அதிரடி #NowAtVikatan

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீ ன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டு அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் மீதான விசாரணை நியூயார்க்கில் நடைபெற்றது. ஹாலிவுட்டின் செல்வாக்கு மிக்க தயாரிப்பாளராக விளங்கி வந்தவர் ஹார்வி வெயின்ஸ்டீன், கடந்த 2017-ம் ஆண்டு, மீ டூ இயக்கத்தின் மூலமாக இவர் மீது பலரும் பாலியல் புகார் அளித்திருந்தனர். ஹார்வி வெயின்ஸ்டின் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம்.

80-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் புகார்...  ஹாலிவுட் ஹார்வி வெய்ன்ஸ்டீன் வழக்கின் நிலை என்ன?
25 Feb 2020 4 PM

லைகா நிறுவனத்துக்கு கமல் கடிதம்!

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் கமலஹாசன் கடிதம் எழுதியுள்ளார். லைகா நிறுவனத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில் கதாநாயகர் முதல் கடை நிலை ஊழியர் வரை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விபத்து நேரிட்டால் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமே பொறுப்பு ஏற்க வேண்டும்' என அவர் கூறியுள்ளார்.

25 Feb 2020 11 AM

`அமித் ஷாவைச் சந்தித்துப் பேசுகிறேன்!’ - கெஜ்ரிவால்

டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வந்த சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தில் நேற்று கலவரம் வெடித்தது. சிஏஏ ஆதரவு, எதிர்ப்பு தரப்பினர் சென்ற பேரணிகள், ஒரே இடத்தில் சந்திக்க நேரிட்டதால் கலவரம் வெடித்ததாகச் சொல்லப்படுகிறது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை 7 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதில் காவலர் ஒருவரும் அடக்கம்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் பதற்றத்துக்குரிய 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ``டெல்லி மக்களை அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டுகிறேன். வடகிழக்குப் பகுதிகளில் நிலவும் கலவரம் கவலை அளிக்கிறது. பல மக்களும் காவலர்களும் மோசமப் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தங்களின் உயிரையும் இழந்துள்ளனர். பல வீடுகள், கடைகள், வாகனங்கள் தீயிக்கு இரையாகியுள்ளன. இது சற்றும் எதிர்பாராதது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இன்று மதியம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறேன்” எனக் கூறினார்.

25 Feb 2020 9 AM

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அந்த இடங்களுக்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 26-ம் தேர்தலும் அன்று மாலையே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இதற்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 13-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 Feb 2020 8 AM

நள்ளிரவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

டெல்லியின் மஜ்பூர், ஜாஃப்ராபாத், யமுனா விஹார் போன்ற பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில், நேற்று வன்முறை வெடித்தது. காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். ஜாஃப்ராபாத் பகுதியிலுள்ள வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இந்த வன்முறையில், காவலர் ஒருவர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து மஜ்பூர், ஜாஃப்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `வடகிழக்கு டெல்லியில் இன்னும் பதற்றமான சூழலே நிலவுகிறது. வன்முறை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வந்துகொண்டேஇருக்கின்றன. சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவருவதுகுறித்து டெல்லி கமிஷனர், சீலாம்பூர் டிசிபி-யுடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தியிருக்கிறார்'' என்கிறார்கள். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டெல்லியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நிலையில், டெல்லி வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நள்ளிரவில் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர், உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

`காவலரை மிரட்டி துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்!’ - பற்றி எரியும் டெல்லி போராட்டக்களம்

அதேபோல், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தீ வைக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இதுகுறித்துப் பேசிய டெல்லி தீயணைப்புத்துறையினர், ``நேற்றிலிருந்து இன்று அதிகாலை 3 மணி வரை 45 இடங்களில் தீ வைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. தீயை அணைக்கும் பணியின்போது, தீயணைப்பு வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேபோல், தீயணைப்பு வாகனம் ஒன்றுக்கும் தீவைக்கப்பட்டது'' என்றனர்.

இந்த நிலையில், டெல்லியின் மாவூஜ்பூர், பிரஹாம்பூர் பகுதியில் இன்று காலையும் வன்முறை வெடித்தது. இருதரப்பினர் கற்களை வீசி தாக்கிக்கொண்டநிலையில், அங்கு போலீஸார் விரைந்தனர். இருதரப்பினர் மோதலையடுத்து, அங்கு அதிவிரைவுப் படையினர் மற்றும் போலீஸார், கொடி அணிவகுப்பு நடத்தினர்.

அடுத்த கட்டுரைக்கு