Election bannerElection banner
Published:Updated:

தமிழகத்தில் 15 ஆயிரத்தைக் கடந்தது ஒரு நாள் கொரோனா பாதிப்பு #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பிறந்து 19 நாளான குழந்தை உள்பட 82 பேர் கொரோனாவால் இன்று தமிழகத்தில் உயிரிழந்திருக்கின்றனர்.

25 Apr 2021 7 PM

கிடுகிடுவென உயரும் கொரோனா   பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தைக் கடந்தது. மொத்தமாக இன்று தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,659 ஆக பதிவாகியிருக்கிறது. 82 பேர் பலியாகியிருக்கின்றனர். இதில் 19 நாளே ஆன பெண் குழந்தையும் அடக்கம். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

அதிகபட்சமாக சென்னையில் 4,206 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 1,05,180 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

25 Apr 2021 2 PM

ஆக்ஸிஜன்:பிரதமருக்கு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி  கடிதம்

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் மொத்த ஆக்ஸிஜன் உற்பத்தித் திறன், நாள் ஒன்றுக்கு 400 மெட்ரிக் டன் மட்டுமே. தற்போது 310 மெட்ரிக் டன் தேவையாக இருக்கிறது. விரைவில் 450 மெட்ரிக் டன்னை எட்டும் நிலை ஏற்படும். எனவே ஶ்ரீபெரும்புதூர் ஆலைகளில் இருந்து ஆக்ஸிஜன் திருப்பிவிடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

25 Apr 2021 9 AM

அனுமதிக்கப்படும் சேவைகள்!

முழு ஊரடங்கு நாளான இன்று, அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவ துறை சார்ந்த பணிகள் அனைத்தும் இன்று அனுமதிக்கப்படும்.

அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போதும் அனுமதிக்கப்படும்.

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

ஸ்விக்கி, சோமோட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

உணவு டெலிவரி தவிர்த்து இதர மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு இன்று அனுமதியில்லை.

திருமணம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுப்பாட்டுடன் நடத்திக் கொள்வதற்கும் எவ்வித தடையும் இல்லை

சென்னை - முழு ஊரடங்கு
சென்னை - முழு ஊரடங்கு
25 Apr 2021 9 AM

2021-ம் ஆண்டின் முதல் முழு ஊரடங்கு!

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருக்கும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒவ்வொரு ஞாயிறும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான இன்று, 2021-ம் ஆண்டின் முதல் முழு ஊரடங்கு நாள் கடைபிடிக்கப்படுகிறது. நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய ஊரடங்கு நாளை அதிகாலை 4 மணி வரைத் தொடரும். முழு ஊரடங்கு காரணமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஊரடங்கு
ஊரடங்கு
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு