Published:Updated:

ஒரே நாளில் 805 பேருக்கு தொற்று! -தமிழகத்தில் 17,000 -ஐ கடந்த கொரோனா பாதிப்பு #NowAtVikatan

கொரோனா
கொரோனா

25.5.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

25 May 2020 6 PM

தமிழகத்தில் 17,000 -ஐ கடந்த பாதிப்பு!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 805 -ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,731 -ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் பலியாகியுள்ளனர்

வழக்கம் போல் இன்றும் சென்னையில்தான் அதிக பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் 549 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,000 -ஐ கடந்திருக்கிறது!

25 May 2020 11 AM

சென்னை தனியார் மருத்துவமனையில் ஓ.பி.எஸ் அனுமதி!

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

சென்னை அரும்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், அவருக்கு நேற்று இரவு லேசான நெஞ்சுவலி இருந்ததாகவும் அதையடுத்தே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், அவருக்கு காலையில் ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை நேரில் பார்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

25 May 2020 8 AM

60 நாள்களுக்குப் பின் தொடங்கிய உள்நாட்டு விமான சேவை!

இந்தியாவில் 60 நாள்களுக்குப் பின் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

கோவை விமான நிலையம்
கோவை விமான நிலையம்

தமிழகத்தில் முதல் விமானமாக இண்டிகோ விமானம் சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றது. பயணிகள் சாதாரண மாஸ்க் முதல் முகம் முழுவதையும் மறைக்கும்படியும் மாஸ்க் அணிந்திருந்தனர். வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் பயணிகள் https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையதளத்துக்குச் சென்று இ - பாஸ் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், பயணிகள் தனிமைப்படுத்தப்படுவது குறித்து ரப்பர் ஸ்டாம்ப் வைக்கப்படும் என்றும் அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

விமான சேவைக்குத் தயாராகும் கோவை விமான நிலையம்... ஒரு மினி போட்டோ டூர்! #SpotVisit

கோவையில் இருந்து இன்று முதல் விமான சேவைகள் தொடங்குகின்றன. பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் பைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டப் பிறகே, விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Posted by Vikatan EMagazine on Sunday, May 24, 2020
அடுத்த கட்டுரைக்கு