Published:Updated:

கொரோனா: 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 1,164 பேருக்கு பாதிப்பு - இன்றைய நிலவரம் #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு

25-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

25 May 2021 7 PM

தமிழகத்தில் இன்றைய   கொரோனா   பாதிப்பு   நிலவரம்

தமிழகத்தில் இன்று 34,285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டிருக்கிறது. அதிகபட்சமாகம் சென்னையில் 4,041 பேர், கோவையில் 3,632 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நேற்றயை எண்ணிக்கையை விட இன்று பாதிப்பு சற்று குறைந்திருக்கிறது. நேற்று சென்னையில் மட்டும் 4,985 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அதேபோல கோவையில் 4,277 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒரே நாளில் மட்டும் 468 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இணை நோய்கள் இல்லாத 134 பேர் உயிரிழந்துள்ளனர். 28,745 பேர் குணமடைந்துள்ளனர். 12 வயதுக்கு குறைவான சிறார்கள் 1,164 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

25 May 2021 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,96,427 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சம் வரை சென்ற நிலையில் தற்போது பாதிப்பு 2 லட்சத்துக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது, இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,69,48,874 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,511. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,07,231-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
மாதிரிப் படம்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,40,54,861-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 25,86,782 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,26,850 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 19,85,38,999 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

25 May 2021 9 AM

போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு!

சென்னையின் பிரபல தனியார் பள்ளியான பி.எஸ்.பி.பி-யில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்புக்கு வந்ததாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பள்ளியின் டீனுக்குப் புகார் அனுப்பப்பட்டது.

சிறுமி வதை  - சிறுவன் கைது
சிறுமி வதை - சிறுவன் கைது
விகடன்

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த விவகாரம். இந்தநிலையில், ஆசிரியர் ராஜகோபாலனை தமிழக காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து ராஜகோபாலன் பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு