Published:Updated:

Tamil News Today: `கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை-5 வரை ஊரடங்கு நீட்டிப்பு'- தமிழக முதல்வர் ஸ்டாலின்

ஸ்டாலின்
ஸ்டாலின்

25-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

25 Jun 2021 7 PM

ஜூலை-5 வரை ஊரடங்கு... மேலும் சில தளர்வுகள்..

ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வரும் 28-ம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் இன்று ஊரடங்கை ஜூலை-5 வரை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதி; ஏற்கனவே மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டதன்படி, வகை-2, வகை-3 உள்ளிட்டவற்றிற்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வகை -1 ல் உள்ள மாவட்டங்களுக்கும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வகை 1 - 11 மாவட்டங்கள்

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை

வகை 2 - 23 மாவட்டங்கள்

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர்,தேனி, தென்காசி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர்

வகை 3 - 4 மாவட்டங்கள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு.

1.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கோயில்கள், தேவாலயங்களில், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி.

2. வகை 1-ல் உள்ள மயிலாடுதுறை, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ஆகிய 11 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை.

3. வகை 2, வகை 3 - ல் உள்ள 27 மாவட்டங்களுக்குள் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல இ-பதிவு தேவையில்லை. திருமண நிகழ்ச்சிக்கு 11 மாவட்டங்களில் இருந்து 27 மாவட்டங்களுக்கு செல்ல இ-பதிவு அவசியம்.

முழு அறிவிப்பை தெரிந்துகொள்ள

download
25 Jun 2021 12 PM

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்..?!

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு கொரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வரும் 28-ம் தேதி வரை அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்தும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு
ஊரடங்கு தளர்வு

இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின், இன்று மருத்துவ வல்லுநர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திவருகிறார். ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாக ஆலோசனை நடைபெறும். மேலும் சில மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

25 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 51,667 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 3,01,34,445 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,329. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,93,310-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,91,28,267-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 6,12,868 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 64,527 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 30,79,48,744 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு