Published:Updated:

அமைச்சர் துரைக்கண்ணு-க்கு கொரோனா; எக்மோ, வெண்டிலேட்டர் கருவிகள் உதவியுடன் சிகிச்சை! - மருத்துவமனை #NowAtVikatan

அமைச்சர் துரைக்கண்ணு
அமைச்சர் துரைக்கண்ணு

25-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

25 Oct 2020 5 PM

அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா!

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, கடந்த 13 -ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அவருக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் துரைக்கண்ணு இருப்பதாகவும் தகவல் வெளியானது. அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இன்று அவரின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி. அவருடன் அமைச்சர் ஜெயக்குமாரும், விஜயபாஸ்கரும் மருத்துவமனை சென்றிருந்தனர்.

அமைச்சர் துரைக்கண்ணு-க்கு கொரோனா; எக்மோ,  வெண்டிலேட்டர் கருவிகள் உதவியுடன் சிகிச்சை! - மருத்துவமனை #NowAtVikatan

இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு எக்மோ, வெண்டிலேட்டர் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

25 Oct 2020 2 PM

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

முதல்வர் - ஆளுநர் சந்திப்பின்போது...
முதல்வர் - ஆளுநர் சந்திப்பின்போது...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் இன்று ஆளுநரை சந்திக்கிறார்.

இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்துவது தொடர்பாக முதலைமைச்சர் பழனிசாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

25 Oct 2020 12 PM

வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

மழை
மழை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு எனவும், தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு எனவும் கூறிருக்கிறது. மேலும், வரும் அக்டோபர் மாதம் 29-ம் தேதி, வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என்றும் தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு