Published:Updated:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் காலமானார்! #NowAtVikatan

25-11-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் காலமானார்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகமது படேல் கொரோனாவால் பாதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். கொரோனா நெகட்டிவ் ஆகி குணமடைந்தாலும், கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அகமது படேல், இன்று அதிகாலை 3:30 மணியளவில் உயிரிழந்தார். இந்தத் தகவலை அவரின் மகன் ஃபைசல் படேல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியின் ஆலோசகராக இருந்த அகமது படேல், காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் இருந்துவந்தார். `காங்கிரஸ் கட்சியின் தூணாக இருந்தவர் அகமது படேல்’ என ராகுல் காந்தி தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.