Published:Updated:

Corona Live Updates: `ஒரே நாளில் 6,988 பேருக்கு தொற்று!' - தமிழகத்தில் 2 லட்சத்தை கடந்த பாதிப்பு

கொரோனா
கொரோனா

25.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

25 Jul 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 6,988 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக 6,000-த்தை கடந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,758 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,51,055 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 89 ஆக உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 3409 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 61,729 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Corona Live Updates: `ஒரே நாளில் 6,988 பேருக்கு தொற்று!' - தமிழகத்தில் 2 லட்சத்தை கடந்த பாதிப்பு

சென்னையில் மேலும் 1,329 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1329 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,537 ஆக அதிகரித்துள்ளது.

25 Jul 2020 12 PM

சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா!

கொரோனா
கொரோனா

மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரில் அவரே உறுதி செய்திருக்கிறார். ``நான் கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வருகிறேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தினசரி கொரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வேன்” எனத் தெரிவித்திருக்கிறார் சிவராஜ் சிங் சவுகான்

25 Jul 2020 9 AM

இந்தியாவில் 13 லட்சத்தை கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,36,861 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 48,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 757 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,358 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,49,432 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
"15 அடிக்கு குழிதோண்டி, அதில் 200 கிலோ சுண்ணாம்பு போடுவோம்!" - கொரோனா தன்னார்வலர்களின் சேவைப் பணி

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,57,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,99,967 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,132 ஆகவும் உள்ளது

அடுத்த கட்டுரைக்கு