Published:Updated:

`அரசுக் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு!’ - சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் #NowAtVikatan

முதல்வர் பழனிசாமி
Live Update
முதல்வர் பழனிசாமி

26-02-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

26 Feb 2021 4 PM

அரசுக் கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு!

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. இந்தநிலையில், இன்று அரசுக் கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு இந்த 10.5 சதவிகித தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. சீர்மரபினர்களுக்கு ஏழு சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கும் மசோதா வகை செய்கிறது.

26 Feb 2021 3 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி!

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் இன்று மாலை 4:30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது செய்தியாளர்களைச் சந்தித்துவருகிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. புயல் மழை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டுவருகின்றன. கூட்டுறவு வங்கிகளில் ஆறு சவரன் நகை வரை வைத்து விவசாயிகள் உள்ளிட்ட ஏழை மக்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்றபடி ஏப்ரல் 1-ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு அரசு ஒவ்வொரு நடவடிக்கையும் எடுத்துவருகிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் அவர் சொல்வதைக் கேட்டுத்தான் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லிவருகிறார். அரசு அறிவிக்கவிருக்கும் திட்டங்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு ஸ்டாலின் அதை அறிவிப்பார். உண்மைக்குப் புறம்பான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசிவருகிறார்.

எந்த மாநிலமும் பணத்தை வைத்துக்கொண்டு திட்டங்களை அறிவிப்பதில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் இருப்பதால் வாங்கப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் தி.மு.க குரல் கொடுக்கவில்லை. தேர்தல் வந்தால் மட்டும் குரல் கொடுப்பார்கள். தேர்தலை மனதில்வைத்து அரசு, அறிவிப்புகளை வெளியிடவில்லை. மக்களுக்கு அந்தந்தக் காலகட்டத்தில் என்ன தேவையோ அதைப் பொறுத்து ஒவ்வொரு திட்டத்தையும் அறிவித்துவருகிறோம்” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
26 Feb 2021 11 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி!

எடப்பாடி  பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. இன்று மாலை சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார். இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், கூட்டுறவு வங்கிகளில் ஆறு சவரன் நகை வரை வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், மகளிர் சுயஉதவி குழுக்கள் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார். இன்றைய கூட்டத்தொடரில் மேலும் சில அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

26 Feb 2021 11 AM

இன்று தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு..!

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் விரைவில் நடைபெறவிருக்கின்றன. இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் குழு தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அண்மையில் தனது ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. தொடர்ந்து டெல்லி திரும்பிய தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, தேர்தல் தேதிகளை இறுதி செய்யும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

இந்தநிலையில், இன்று மாலை 4:30 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்கள். இதன் காரணமாக இன்று மாலை 4:30 மணிக்கு ஐந்து மாநிலத் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism