Published:Updated:

திடீர் மாரடைப்பு - மருத்துவரும் நடிகருமான சேதுராமன் காலமானார்!#NowAtVikatan

சேதுராமன்
சேதுராமன்

26.3.2020 |இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

26 Mar 2020 11 AM

13 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 606லிருந்து 649ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேரும், கேரளாவில் 118 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியர்கள் 602 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என 649 பேருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை 11 ஆக உயிரிழப்பு இருந்த நிலையில், மகாராஷ்டிராவில் மார்ச் 24ஆம் தேதி இறந்த பெண்ணுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் காஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 65 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததை அடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

26 Mar 2020 11 AM

விதிகளை மீறி ஏற்றிச்செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி சந்தையில் சுகாதார இடைவெளியில் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்யாவசிய பொருள்களை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நகராட்சி குப்பை லாரியில் விதிமுறைகளை மீறி ஏற்றிச்செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்.

26 Mar 2020 11 AM

கொரோனா வைரஸ் எதிரொலி - குழாய் மூலம் பொருட்கள்!

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக திருச்சி சிந்தாமணி உணவு அங்காடியில் பாதுகாப்பாக பொருட்கள் குழாய் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் வீடியோ காட்சிகளை கீழே காணவும்!

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக திருச்சி சிந்தாமணி உணவு அங்காடியில் பாதுகாப்பாக பொருட்கள் குழாய் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இடம்:திருச்சி, வீடியோ: தே.தீட்ஷித்

Posted by Vikatan EMagazine on Wednesday, March 25, 2020
26 Mar 2020 11 AM

போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்!

கோவை காந்திரபும் நகர பேருந்து நிலையத்தில் கேரள பதிவு எண் கொண்ட ஒரு கார் அத்துமீறி உள்ளே நுழைந்தது. இதனைப் பிடித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் காரில் மதுபோதையில் இருந்த இளைஞர் பிரேம்குமார் என்பதும் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கொடுக்க அவரது வாகனத்தை சோதனையிட்டனர். அதில் ஏராளாமான மது பாட்டில்கள் இருக்க அவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் போலீஸாருடன் பிரேம்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

27 Mar 2020 12 AM

மருத்துவரும் நடிகருமான சேதுராமன் காலமானார்!

`கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்.

நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சேது, அதன்பின்னர் வாலிப ராஜா, சக்கபோடு போடுராஜா, 50/50 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தோல் மருத்துவரான இவர், மார்ச் 26ம் தேதி மாரடைப்பால் காலமானார். இந்த செய்தியை நடிகர் சதீஷ், ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், அவரது குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு