Published:Updated:

`ஒரு லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை..!’ - அமெரிக்காவில் கொரோனா #Updates #NowAtVikatan

கொரோனா
கொரோனா

26-05-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

26 May 2020 10 PM

அமெரிக்காவில் ஒரு லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உச்சத்தில் இருக்கிறது. அந்நாட்டில் கொரோனா காரணமாக 17,12,483 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1,00,002 பேர் பலியாகியுள்ளனர். 4,67,962 பேர் குணமடைந்துள்ளனர்.

26 May 2020 10 PM

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். அவர் தனது வீட்டில் தவறி விழுந்ததில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆறுமுகன் தொண்டமானுக்கு வயது 55.

26 May 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்!

கொரோனா
கொரோனா

தமிழகத்தில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 646 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 611 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு, வீடு திரும்பியிருக்கிறார்கள். தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 9 பேர் பலியாகியுள்ளனர்,

சென்னையில், இதுவரை ஒட்டுமொத்தமாக 11,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

26 May 2020 6 PM

மத்திய மாநில அரசுகளின் தோல்வியைக் காட்டுகிறது! 

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் பொது முடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், 'புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை உருவானது, மத்திய மாநில அரசுகளின் தோல்வியைக் காட்டுகிறது' எனக் கண்டனம் தெரிவித்தது. மேலும், உடனடியாக தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

26 May 2020 5 PM

தமிழகத்தில் அதிகரிக்கப்பட்ட  விடைத்தாள் திருத்தும் மையங்கள்!

விடைத்தாள்
விடைத்தாள்
மாதிரி படம்

தமிழகத்தில், நாளை மறுநாள் முதல் ப்ளஸ்2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. முன்னதாக, 67 ஆக இருந்த விடைத்தாள் திருத்தும் மையங்கள், தற்போது 202 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் அங்கமாக, ஆசிரியர்கள் தனிமனித இடைவெளியுடன் பணியாற்றுவார்கள் என்பதால், விடைத்தாள் திருத்தும் மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

26 May 2020 3 PM

தமிழக அரசின் உத்தரவு!

`ஒரு லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை..!’ - அமெரிக்காவில் கொரோனா #Updates #NowAtVikatan

தமிழக அரசு, சிபிசிஐடி இயக்குநரை மாற்றி புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. சிபிசிஐடி இயக்குநராக இருந்த ஜாபர் சேட், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதீப் வி.பிலிப்பை ஜாபர் சேட்டுக்கு பதில் சிபிசிஐடி டிஜிபி-யாக நியமித்து தமிழக அரசு புதிய உத்தரவு பிறபித்திருக்கிறது.

26 May 2020 3 PM

டன் கணக்கில் வீணாகும் காய்கறிகள்!

டன் கணக்கில் வீணாகும் காய்கறிகள்! திருமழிசை தற்காலிகக் காய்கறிச் சந்தையில் விற்பனை இல்லாததால் வியாபாரிகள் டன் கணக்கில்...

Posted by Vikatan EMagazine on Tuesday, May 26, 2020

திருமழிசை தற்காலிகக் காய்கறிச் சந்தையில் விற்பனை இல்லாததால் வியாபாரிகள் டன் கணக்கில் காய்கறிகளைக் குப்பையில் வீசிக்கொண்டிருக்கின்றனர். `பாதிக்குப் பாதி கூட வியாபாரம் இல்லை. திருமழிசை சரிப்பட்டு வரல வேற இடம் மாத்துனாதான் நாங்க பிழைக்க முடியும்' விற்பனை மந்தத்தால் பரிதவிக்கும் வியாபாரிகள்.

-சே.பாலாஜி

26 May 2020 12 PM

மீனவர்களுக்கு அனுமதி!

கிழக்குக் கடற்கரைப் பகுதி மீனவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 31ம் தேதி வரையிலும் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31ம் தேதி வரையிலும் 47 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலத்தைத் திருத்தி மத்திய அரசு திருத்திய ஆணையை வெளியிட்டுள்ளது.

அதனால், கொரோனா நோய்க்கட்டுப்பாடு காரணமாகத் தொழில்நிறுத்தம் செய்துள்ள தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம். அதேபோல், மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள மீனவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 May 2020 11 AM

தென்னை ஓலைத் தொப்பி!

திருச்சியில் ஊரடங்கால் விவசாய வேலை கிடைக்காத நிலையில் வெயிலுக்காகத் தென்னை ஓலையில் தொப்பி செய்து வருமானம் ஈட்டி வரும் விவசாயக் கூலித் தொழிலாளி. வீடியோ - தே.தீட்ஷித்

Posted by Vikatan EMagazine on Monday, May 25, 2020
26 May 2020 9 AM

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி
எம். விஜயகுமார்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

`ஜூன் 1-ல் பத்தாம் வகுப்புத் தேர்வு... மாணவர்களின் மனநிலை எப்படியிருக்கும்?' - உளவியல் நிபுணர்
அடுத்த கட்டுரைக்கு