Published:Updated:

Corona Live Updates: தமிழகத்தில் 2.13 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 6,986 பேருக்குத் தொற்று

Corona
Corona

26.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

26 Jul 2020 6 PM

தமிழகத்தில் 2.13 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,13,723 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,471 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,526 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 85 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 3,494 ஆக அதிகரித்துள்ளது.

corona
corona

சென்னையில் மேலும் 1,155 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,155 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,695 ஆக அதிகரித்துள்ளது.

26 Jul 2020 1 PM

நடிகை வனிதா புகாரில் கைதுசெய்யப்பட்ட சூர்யாதேவிக்கு கொரோனா

நடிகை வனிதா கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட டிக்டாக் பிரபலம் சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை விசாரித்த வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் ஆய்வாளருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில், சூர்யா தேவி தலைமறைவாகிவிட்டதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

சூர்யாதேவி
சூர்யாதேவி

சூர்யா தேவி கைது செய்யப்பட்டபோது காவல்நிலையத்தில் இருந்த காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சென்னை: நள்ளிரவுவரை காவல் நிலையத்தில் காத்திருந்த நடிகை வனிதா - அதிகாலையில் சூர்யாதேவி கைது
26 Jul 2020 10 AM

இந்தியாவில் 14 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,85,522 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Corona
Corona
Unsplash

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 705 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,063ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,85,577 ஆகவும் உயர்ந்துள்ளது.

புதுச்சேரி: `எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா!’ - மரத்தடியில்  சட்டப்பேரவைக் கூட்டம்
26 Jul 2020 10 AM

கொரோனா - உலக நிலவரம்!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,62,00,326 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 99,13,072 ஆக அதிகரித்திருக்கிறது. 6,48,440 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Corona
Corona
Unsplash

அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 43,15,709 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால், 1,49,398 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

444 கொரோனா மரணங்கள்... உண்மை என்ன?
அடுத்த கட்டுரைக்கு