Published:Updated:

பாலிவுட் சர்ச்சை: `இழந்த பணம், புகழை மீட்டுவிடலாம்; நேரத்தை மீட்க முடியாது!’ - ஏ.ஆர்.ரஹ்மான் #NowAtVikatan

 ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

26.7.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

26 Jul 2020 5 PM

`இழந்த பணம், புகழை மீட்டுவிடலாம்; நேரத்தை மீட்க முடியாது!’ - ஏ.ஆர்.ரஹ்மான்

பாலிவுட்டில் நல்ல பட வாய்ப்புகளை என்றுமே தான் மறுத்ததில்லை என்றும் ஆனால், வேண்டுமென்றே ஒரு கும்பல் வதந்திகளைப் பரப்பி வருவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்தார். இதுகுறித்து பாலிவுட்டின் மூத்த நடிகர் சேகர் கபூர், ``உங்களுக்கு என்ன பிரச்னை தெரியுமா ஏ.ஆர்.ரஹ்மான். நீங்கள் ஆஸ்கர் விருது வென்றுவிட்டீர்கள். பாலிவுட்டில் கையாள முடியாத அளவு திறமை உங்களிடம் இருக்கிறது’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

இதற்குப் பதிலளித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ``இழந்த பணம், புகழ் ஆகியவற்றை மீட்டுவிடலாம். ஆனால், நேரத்தை இழந்தால் மீட்க முடியாது. அமைதியாகக் கடந்துபோவோம். நாம் செய்ய வேண்டிய சிறந்த செயல்கள் நிறைய இருக்கின்றன’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

`எனக்கு எதிரான கும்பல்; அவர் சொல்லித்தான் தெரிந்தது!’ - பாலிவுட் வாய்ப்புகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்
26 Jul 2020 2 PM

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு புதிய செயலாளர்!

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயலாளராக கே.பாலசுப்ரமணியம் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகப் பதவி வகித்து வந்தவர். அதேபோல், தேர்தல் ஆணையத்தின் செயலாளராக இருந்த எல்.பாலசுப்ரமணியன் ஐ.ஏ.எஸ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

26 Jul 2020 12 PM

மாவட்ட ஆட்சியர்களுடன் ஜூலை 29-ல் முதல்வர் ஆலோசனை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக்குப் பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து தெரியவரும்.

"பொருளாதாரம் முக்கியம்!"- கர்நாடக ஊரடங்கு நீக்கம்... தமிழகத்திலும் செய்யலாமா? #VikatanPollResults
26 Jul 2020 12 PM

இலவச மாஸ்க் திட்டம்!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் இலவச மாஸ்க் விநியோகிக்கும் திட்டம் நாளை தொடங்கப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதைத் தொடங்கி வைக்கிறார்.

வால்வ் வைத்த மாஸ்க் ஆபத்தானது... ஏன்? - தொற்றுநோயியல் மருத்துவர் விளக்கம்
அடுத்த கட்டுரைக்கு